வாட்ஸ் அப்பில் புதுசா வந்துருக்கும் வசதிகள்!

வாட்ஸ் அப்பில் புதுசா வந்துருக்கும் வசதிகள்!

வாட்ஸ் அப் செயலியில் புதிதாக சைலன்ஸ் அன்னோன் கால்ஸ் (silence unknown calls) மற்றும் பிரைவசி செக்கப் (Privacy CheckUp) என இரண்டு அட்டகாசமான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அப்டேட்களை அள்ளி தெளிக்கும் வாட்ஸ்அப் செயலி தனது பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு அவ்வபோது சில முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, புதிதாக சைலன்ஸ் அன்னோன் கால்ஸ் மற்றும் பிரைவசி செக்கப் என இரண்டு அட்டகாசமான அப்டேட்களை வழங்கியுள்ளது.

அன்னோன் கால்ஸ்

இதில் முதல் அம்சமான செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள செய்யும். இதன் மூலம் பயனர் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லாதவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் பயனர்களை தொந்தரவு செய்யாது.

எனினும், நோட்டிஃபிகேஷன் பகுதியில் அழைப்பு வந்ததற்கான தகவல் மற்றும் கால்ஸ் டேபில் அழைப்பு விவரம் காட்டும். அதேபோல் புதிய அம்சம் அழைப்புகளை முழுமையாக தடுக்காது. மாறாக, அழைப்பு வந்த தகவலை வழங்கி, யாரோ அழைப்பை மேற்கொள்ள முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கும்.

error: Content is protected !!