நவராத்திரி பிரம்மோத்ஸவம் – திருப்பதி தேவஸ்தானம் புது அறிவிப்பு!

நவராத்திரி பிரம்மோத்ஸவம் – திருப்பதி தேவஸ்தானம் புது அறிவிப்பு!

திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் 9 நாள்கள் நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா அக்.15-ம் முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் திருமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி மற்றும் தேவஸ்தானத்தில் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தர்மா ரெட்டி, ’அனைத்து பக்தர்களுக்கும் திருப்திகரமான ‘ஸ்ரீவாரி தரிசனத்தை’ வழங்க தேவஸ்தானம் உறுதி பூண்டுள்ளது. சாதாரண பக்தர்களுக்கு வசதியான தரிசன அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்க அனைத்து துறைகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவராத்திரி பிரம்மோத்ஸவத்தில் அக்டோபர் 19-ஆம் தேதி கருட வாகன சேவை, அக்டோபர் 20-ஆம் தேதி புஷ்பக விமானம், அக்டோபர் 22-ஆம் தேதி தங்கத் தேர் திருவிழா, அக்டோபர் 23-ஆம் தேதி சக்ர ஸ்நான மஹோத்ஸவம் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உள்ளிட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை தரிசனம் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கல்யாண உற்சவம் உள்ளிட்ட கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, அக்டோபர் 19-ம் தேதி கருட சேவா வாகனத்தை முன்னிட்டு ட்வீன் காட் சாலைகளில், இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது’ என்று ரெட்டி கூறினார்.

error: Content is protected !!