கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு! – தமிழகம் சாதனை!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு! – தமிழகம் சாதனை!

சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை கடந்த 19ஆம் தேதி மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023இல் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இந்த கேலோ இந்தியா போட்டிகள், ஜனவரி 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றோடு நிறைவு பெற்றன.

இந்தப் போட்டிகள் தொடங்கிய 12 வது நாளில், தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 38 தங்கப் பதக்கம், 20 வெள்ளிப் பதக்கம், 39 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 97 பதக்கங்களை வென்று புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 157 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. அரியானா மாநிலம் 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதங்கங்களுடன் 3 வது இடத்தை பிடித்துள்ளது.

டெல்லி, 13 தங்கம், 18 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது. 5 வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் 13 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த கேலோ இந்தியா போட்டிகளில் 26 போட்டிகள் இடம்பெற்றுள்ளது. 26 போட்டிகளில் மொத்தம் 933 பதக்கங்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 278 தங்கம், 278 வெள்ளி, 377 வெண்கலப் பதக்கங்களை பெற, சுமார் 6,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்க பட்டியல் (முதல் 10 இடம்) :

1. மகாராஷ்டிரா – 153 பதக்கங்கள் (56 தங்கம்)
2. தமிழகம் – 97 பதக்கங்கள் (38 தங்கம் )
3. ஹரியானா – 103 பதக்கங்கள் (35 தங்கம்)
4. டெல்லி – 55 பதக்கங்கள் (13 தங்கம்)
5. ராஜஸ்தான் – 47 பதக்கங்கள் (13 தங்கம்)
6. தெலுங்கானா – 24 பதக்கங்கள் (13 தங்கம்)
7. உத்தரப்பிரதேசம் – 42 பதக்கங்கள் (11 தங்கம்)
8. பஞ்சாப் – 39 பதக்கங்கள் (11 தங்கம்)
9. கேரளா – 35 பதக்கங்கள் (11 தங்கம்)
10. மணிப்பூர் – 31 பதக்கங்கள் (10 தங்கம்)

error: Content is protected !!