ப. சிதம்பரம் மீண்டும் கைது!

ப. சிதம்பரம் மீண்டும் கைது!

கடந்த செப்டம்பர் 5- தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ப, சிதம்பரத் திடம் நடைப்பெற்ற இரண்டு மணி நேர விசாரணைக்கு பின்னர், அடுத்தக்கட்ட விசாரணைக்காக அவரி அமலாக்க துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிதம்பரத்தின் கைது உத்தரவுகளை அமலாக்க துறை காகிதத்தில் வைத்துள்ளது, நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு அவர் திகாரில் இருந்து அப்புறப்படுத்த படுவார் என தெரிகிறது. முன்னதாக இந்த வழக்கு தொடர் பாக சிதம்பரத்தை விசாரிக்கவும், தேவைப்பட்டால் கைது செய்யவும் மூன்று சிறப்பு அதிகாரிகள் கொண்ட அமலாக்க துறை குழுவிற்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு நீதிமன்ற அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். மிகப் பெரிய லாயர்கள் மூலம்பலமுறை ஜாமீனுக்கு முயன்றபோதும் கிடைக்க வில்லை. இதனால், பல நாள்கள் சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கும் ப.சிதம்பரம் சோகத்துடன் உள்ளார். சிறையில் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். சிறை வாழ்க்கை ப.சிதம்பரத்துக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. சரியாக உணவு உட்கொள்ளாத நிலையில் அவரின் முகம் வற்றி சோகத்துடன் காணப்படுகிறது. உடலும், மெலிந்து போய் உள்ளது.

இதற்கிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சிதம்பரம் கைது குறித்து அளித்த பேட்டியில், “நான் ப.சிதம்பரத்தைக் கைது செய்யவில்லை. சி.பி.ஐ., அமலாக்கத் துறை இரண்டு அமைப் பு களுமே உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படவில்லை. அதேபோல், ப.சிதம்பரமும் என்னைக் கைது செய்யவில்லை. அவர், உள்துறை அமைச்சராக இருந்தபோதும் சி.பி.ஐ., அமலாக்கத் துறை இரண்டுமே அவருக்குக் கீழ் செயல்படவில்லை. நான் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டவன். நீதிமன்றம் என்னைக் குற்றவாளி இல்லை என்று விடுவித்துள்ளது. சிதம்பரம், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர். என் வழக்கையும் சிதம்பரம் வழக்கையும் ஒப்பிட முடியாது. சிதம்பரம் தன்னைக் குற்றமற்றவர் என்று கருதினால், அதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே அக்டோபர் 24-ம் தேதி வரை சிதம்பரம் அமலாக்கத்துறையினரின் பிடியில் இருப்பார். முன்னதாக சிதம்பரம் திகார் சிறையில் இருக்கும்போது அவருக்குத் தனி அறை ஒதுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஆனால், தற்போது அமலாக்கத்துறையினர் கட்டுப்பாட்டில் அவருக்குத் தனி அறை, தினமும் வீட்டு உணவு, கட்டில், தலையணை, வெஸ்டர்ன் டாய்லெட், மருந்துகள், தனி பாதுகாப்பு மற்றும் தினமும் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் சந்தித்துச் செல்ல அனுமதி போன்ற வசதிகள் செய்துதரச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!