உலக பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் !

உலக பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் !

புளூம்பெர்க் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் அவர் 11-வது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.7.13 லட்சம் கோடி.

10 பேரில் ஒரே பெண் பணக்காரர்

இரண்டாம் இடத்தில் அதானி குழும தலைவர் கெளதம் அதானி உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.5.17 லட்சம் கோடி.என்ஜினீயரியங், கட்டுமான நிறுவனமான ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் ஷபூர் பலோன்ஜி மிஸ்திரி – ரூ.2.60 லட்சம் கோடியுடன் 3 வது இடமும், எச்சிஎல் கணினி குழும நிறுவனர் ஷிவ் நாடார் – ரூ.2.36 லட்சம் கோடியுடன் 4 வது இடமும், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி – ரூ.1.94 லட்சம் கோடியுடன் 5 வது இடமும், சீரம் இன்ஸ்டியூடின் சைரஸ் பூனாவாலா – ரூ.1.56 லட்சம் கோடியுடன் 6 வது இடமும் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் இடம்பெற்றுள்ள ஒரே பெண்ணான ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் – ரூ.1.53 லட்சம் கோடியுடன் 7 வது இடமும் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் 82-வது இடத்தில் அவர் உள்ளார். இவர் ஜிண்டால் குழுமத்தின் கௌரவத் தலைவராக செயல்பட்டு வருகிறார். சன் பார்மாசூட்டிகல் நிறுவனர் திலீப் சங்வி – ரூ.1.52 லட்சம் கோடியுடன் 8 வது இடமும், அவென்யூ சூப்பர் மார்ட், பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனர் ராதாகிருஷ்ணன் தாமினி – ரூ.1.44 லட்சம் கோடியுடன் 9 வது இடமும் பெற்றுள்ளனர். இரும்பு உற்பத்தி ஜாம்பவான் லட்சுமி மிட்டல் – ரூ.1.41 லட்சம் கோடியுடன் 10 வது இடத்தை பெற்றுள்ளார்.

error: Content is protected !!