மலேசியா புதிய மன்னராகியுள்ள இப்ராஹிம் இஸ்கந்தர் சொத்து மதிப்பு இம்புட்டா?

மலேசியா புதிய மன்னராகியுள்ள இப்ராஹிம் இஸ்கந்தர் சொத்து மதிப்பு இம்புட்டா?

லேசிய நாடு கடந்த 1957ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட்டு, மக்கள் வாக்களித்து புதியதாக பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும் அங்கு மன்னர் அதிகாரமும் நீடித்து வருகிறது. முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார்.இந்நாட்டின் நீதிமன்றங்கள், காவல்துறை, சட்டத்துறை ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது.

அந்த வகையில் மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பதவியேற்று கொண்டார். கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அரச குடும்பத்தினர், அந்நாட்டின் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராகிம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பதவிப் பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டார்.இவ்விழாவில், அரசு குடும்பத்தினர், அந்நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று முடிசூடி இருக்கும் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், மற்றும் அவரது குடும்பத்தினர்களின் சொத்து மதிப்புக் குறித்த தகவல்களால் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறார். தற்போதைக்குக்வெளித்தெரியும் சொத்துக்களின் அடிப்படையில் மலேசியா மன்னரின் சொத்து மதிப்பினை தோராயமாக 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் என ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது. பல்வேறு சொந்த நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் முதலீடுகள் காரணமாக, விநாடி தோறும் இந்த சொத்துக்களின் மதிப்பு வளரவும் கூடியவை.

மேலும் மலேசியாவின் முக்கிய செல் சேவை நிறுவனங்களில் ஒன்றான யு மொபைலில் 24 சதவீத பங்குகள் இதற்கு ஒரு உதாரணம். வெளித்தெரியும் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் முதலீடுகள் மட்டுமே 588 மில்லியன் டாலராகும். சிங்கப்பூரில் மலேசியா மன்னர் வைத்திருக்கும் நிலத்தின் மதிப்பு மட்டுமே 4 பில்லியன் டாலர். பரந்து விரிந்திருக்கும் ’டைர்சால் பார்க்’கும் அதில் அடங்கும். மலேசியா சுல்தானின் பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டு போர்ட்ஃபோலியோ மட்டுமே 1.1 பில்லியன் டாலராக உள்ளது. இதர சாம்ராஜ்யமாக ரியல் எஸ்டேட், சுரங்கத் தொழில்கள், தொலைத்தொடர்பு மற்றும் பாமாயில் உற்பத்தி என பல திசைகளில் விரிந்து பரந்துள்ளது.

மலேசியா சுல்தான் குடும்பத்தின் செல்வத்திற்கு முக்கிய சான்றாக, அவரது உத்தியோகபூர்வ இல்லமான ’இஸ்தானா புக்கிட் செரீன்’ உள்ளது. அங்கே 300-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் அணிவகுத்துள்ளன. அவற்றில் ஒன்று ஹிட்லர் பரிசளித்த பெருமைக்குரியது. தங்கம் மற்றும் நீலம் பாவித்த ’போயிங் 737’ உட்பட தனியார் ஜெட் விமானங்கள் தனியாக நிறுத்தப்பட்டுள்ளன. இத்தனை சொத்துக்கள் இருப்பதால், சுல்தான் குடும்பத்தினர் பாதுகாப்புக்கு என ஒரு தனியார் ராணுவத்தையும் நியமித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் பதவியேற்றுக்கொண்டது குறித்து கூறிய அவர், “நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன், ஆனால் அவர்கள் தவறாக ஏதாவது செய்கிறார்கள் என்று நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!