காஸாவில் பஞ்சம், நோய்த்தொற்றால் உயிரிழக்கும் போக்கு அதிகரிப்பு :ஐ.நா இயக்குநர் தகவல்!

காஸாவில் பஞ்சம், நோய்த்தொற்றால் உயிரிழக்கும் போக்கு அதிகரிப்பு :ஐ.நா இயக்குநர் தகவல்!

டந்த 2023 ஆண்டு அக்டோபர் மாதத்தின் போது ஹமாஸ் அமைப்பினர் காஸா (Gaza) பகுதியில் மீது தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் மீது எதிர்த் தாக்குதல் நடத்தியது. பின்னர் இது போராக உருவெடுத்தது (Israel–Hamas war). இந்நிலையில் இந்த போரானது 100 நாட்களை தற்போது கடந்துள்ளது. மேலும் இந்த போரில் இதுவரை 24 ஆயிரத்திற்கு மேல் பலியாகி உள்ளனர், 60,834 பேர் காயம் அடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அது மட்டும் இன்றி கடந்த 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 உடல்கள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது

மேலும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவின் 80 % மக்கள் இடம்பெயர்ந்து அகதிகள் முகாம்களில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பஞ்சம் மற்றும் நோய்த்தொற்றால் ஏராளமான் காஸா மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசியுள்ள உலக உணவு திட்டத்தின் இயக்குநர் சிண்டி மெக்கெய்ன், “காசாவுக்கு செல்லும் உணவுப்பொருள்களை எடுத்துச்செல்ல அதிக நேரம் ஆகிறது. இதற்கு உணவு எடுத்துச் செல்லும் பகுதிகள் குறைவாக இருப்பதும், சோதனையிட அதிக நேரம் எடுத்து கொள்வதும் காரணமாக இருக்கிறது.இதனால் சில மைல் தூரத்தில் உணவு பொருள்கள் இருந்தும் மக்கள் பட்டினியால் தங்கள் உயிரை இழக்கும் நிலை ஏற்படுகிறது. பட்டினியில் உள்ள மக்கள் உணவு பொருள்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை வழிமறிக்கும் நிலையும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே இஸ்ரேலின் தாக்குதல்களால், காஸாவின் சுகாதார அமைப்பு மிக மோசமான கட்டத்தில் உள்ளது. 36 மருத்துவமனைகளில் 15 மருத்துவமனைகள் மட்டுமே செயல்படுகின்றன. மேலும் எந்த உதவியும் இல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், காஸாவில் மருத்துவமனைகள் ஒவ்வொன்றாகச் சரிந்து வருகின்றன. அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸாவிலிருந்து 85 சதவிகித மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். போரினால் சிதைந்த பகுதிகளில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை இழந்திருக்கின்றனர்.காஸா மற்றும் லெபனானின் எல்லைகளில் பத்திரிகையாளர்கள், ஐ.நா ஊழியர்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் நியாயப்படுத்தியதாக, பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!