ஆக்கரமிப்பை அகற்றும் விவகாரம் வெத்து பேப்பராவே இருக்குது1 – இது ரொம்ப தப்பு1 – ஐகோர்ட்

ஆக்கரமிப்பை அகற்றும் விவகாரம் வெத்து பேப்பராவே இருக்குது1 – இது ரொம்ப தப்பு1 – ஐகோர்ட்

போன வருஷம் டிசம்பரில் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கக்கோரியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான தண்ணீர் குறித்து நீதிபதி தலைமையில் குழுஅமைத்து விசாரிக்கவும் பலர் ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.இதில் 2 மனுக்களை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு இதுதான்:

court aug 31

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பாக, பொதுப்பணித்துறைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், புதிதாக எதுவுமே இல்லை. அடையார், கூவம் ஆற்றின் கரையோரங்களில் முறைகேடாக உள்ள 28-க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகளால் தான் வெள்ளப்பெருக்கு சென்னையில் கரைபுரண்டு ஓடியதாக கூறும் அதிகாரிகள், மறுபுறம் அந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற தயக்கம் காட்டுவது ஏன்? என தெரியவில்லை.

தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயிலும் இதே நிலைமை தான் உள்ளது. அடையார் ஆற்றின் கரைகளில் உள்ள ஆக்கரிமிப்புகளை அகற்றும் பணி, கடந்த ஜனவரியில் தொடங்கி மார்ச் வரை நடைபெற்றதாகவும், அதன்பிறகு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக அப்பணியில் இடையூறு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

தேர்தல் முடிந்து, இப்போது மூன்று மாதங்களாகி விட்டது. இந்த மூன்று மாதத்தில் என்ன பணி நடந்துள்ளது? வெள்ள பாதுகாப்பிற்கு என்ன செய்துள்ளார்கள்? என்பது பற்றி அந்த மனுவில் எதையும் குறிப்பிடவில்லை.கூவம் ஆற்றி்ன் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவதை எங்களால் ஏற்க முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றுவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.இயற்கை பேரிடர் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என, கடந்த 2010-ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வருவாய் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005-இன் பிரகாரம் 2010-இல் மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டது என்றும், அதன்பிறகு தேசிய இயற்கை பேரிடர் தி்ட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, சென்னை அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தால், அந்த திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டுகளாக, அந்த திட்ட அறிக்கை காகித வடிவில் தான் உள்ளது.

இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தியிருந்தால், கடந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட துயரத்தை தவிர்த்து இருக்கலாம்.எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது பதில் மனுவை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து பட்டியலிட வேண்டும் எனக்கூறி விசாரணையை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Posts

error: Content is protected !!