“எனக்கு End-யே கிடையாது – விமர்சனம்!

“எனக்கு End-யே கிடையாது – விமர்சனம்!

கால் டாக்ஸி டிரைவான சேகர், ஓரிரவில் இளம்பெண் ஊர்வசியை அவரது வீட்டில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார். போன இடத்தில் அந்த இளம்பெண் சேகரை மது விருந்துக்கு அழைக்க, முன்பின் தெரியாத அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் சேகர் நுழைகிறார். போன இடத்தில் இருவரும் மது அருந்திவிட்டு மயக்கமாகி மட்டையாகி விடுகின்றனர். சில மணி நேரங்கள் கழித்து கண் விழிக்கும் விக்ரம் எழுந்து டாய்லெட் செல்லும் போது ஓர் அறையில் ஒரு பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். உடனே அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் நேரத்தில் சுயம் சித்தா அங்கு வந்து விடுகிறார். இவர்களுக்குள் நடக்கும் தள்ளும் முள்ளுவில் சுயம் சித்தா இறந்து விடுகிறார்.

பக்கா மாடர்னாக முழுக்க ஸ்மார்ட் வீடாக இருக்கும் அந்த பங்களாவில் இருக்கும் ஒவ்வொரு கதவுகளுக்கு பாஸ்வேர்டு லாக் போட்டு இருப்பதால் விக்ரமால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இதை அடுத்து அவர் தப்பிக்க அல்லாடும் நேரத்தில் திருடன் கார்த்திக் அந்த வீட்டினுள் புகுந்து திருட வருகிறார். அதேபோல் அரசியல்வாதி மஸ்தான் பாயும் அந்த வீட்டிற்குள் ஒரு பணப்பெட்டியுடன் வந்து விடுகிறார். அரசியல்வாதியை கண்ட விக்ரமும் திருடன் கார்த்திக்கும் ஒவ்வொரு இடத்தில் அவரவர்கள் ஒளிந்து கொள்கின்றனர். இதை அடுத்து மூவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் அடிதடியோடு மோதிக் கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து மூவருக்குள்ளும் ஒரு கட்டத்தில் சமாதானம் ஏற்பட்டு எப்படி அந்த வீட்டை விட்டு வெளியே தப்பிப்பது என எடுக்கும் முயற்சியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதும் தான் “எனக்கு End-யே கிடையாது திரைப்படத்தின் கதை.

நியூ பேஸான விக்ரம் ரமேஷ், முதல் படம் போல் அல்லாமல் ஃபர்பெக்டாக நடித்திருக்கிறார். சுவயம்சித்தாவை அவர் பார்க்கும் விதம், அவருடன் சேர்ந்து மது அருந்துவது பிறகு அப்படி இப்படி என்று இளசு வாழ்க்கையை வாழ்ந்து அசத்துகிறார். ஹூரோயினாக நடித்திருக்கும் சுவயம்சித்தா ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் கிளாமர் காட்டி கவர்ந்து விடுகிறார். எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் சிவகுமார் ராஜு, திருடனாக நடித்திருக்கும் கார்த்திக் வெங்கட்ராமன் இருவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.. மியூசிக் டைரக்டர் கலாச்சரனின் இசையில் “ஃபன் டமக்கா…” பாடல் நைஸ்.. . பின்னணி இசை திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.“

ஹீரோவாக நடித்திருக்கும் விக்ரம் ரமேஷ் தான் படத்தை எழுதி டைரக்ட் பண்ணி இருக்கிறார். ஒரு வீட்டுக்குள் ஓரிரவில் நடக்கும் கதையை சுவையான சினிமாவாக வழங்கி இருக்கிறார்.

மார்க் 2.75/5

error: Content is protected !!