Paytm பேமென்ட்ஸ் வங்கி சேவைக்கு தடை – ரிசர்வ் வங்கி உத்தரவு!

Paytm பேமென்ட்ஸ் வங்கி சேவைக்கு தடை – ரிசர்வ் வங்கி உத்தரவு!

ர இருக்கும் பிப்ரவரி 29, 2024க்குப் பிறகு எந்த ஒரு வாடிக்கையாளர் கணக்கு, ப்ரீபெய்டு கருவிகள், வாலட்டுகள் மற்றும் ஃபாஸ்ட்டேக்குகள் (FASTags) போன்றவற்றில் டெபாசிட்கள் அல்லது டாப்-அப்களை பெறுவதற்கு Paytm Payments Bank Ltd -ஐ ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு புதன்கிழமை வந்தது. கொடுத்த எச்சரிக்கைகளை மீரி அடுத்தடுத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நம் நாட்டில் புகழ்பெற்ற ஆன்லைன் பேமெண்ட் செயலிகளில் ஒன்று பேடிஎம் (Paytm). தற்போது இதன் சேவையை 8.9 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட தணிக்கையில், ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி செயல்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. அதே சமயம். இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி. என்ற விதிமுறைக்கு Paytm நிறுவனம் இணங்கவில்லை என்பதால் அந்த நிறுவனத்துக்கு, ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரூ.5.5 கோடி அபராதம் விதித்து இருந்தது. ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்த நிலையில், இனி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என்றும், டெபாசிட் மற்றும் டாப் அப் பணம் பெறுவதோ கூடாது என்றும் Paytm நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் வாலட்களில் பணம் பெறுவதோ, என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ, வாடிக்கையாளர் சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, ஃபாஸ்ட்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தவிர வேறு எந்த வகையான வங்கி செயல்பாடுகளிலும் Paytm-ஈடுபடக் கூடாது என ஆணையிடப்பட்டுள்ளது. பிப்.29-க்குள் Paytm பேமன்ட் சர்வீசஸ், One97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவன கணக்குகள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!