ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஒன் டே மேட்ச்களில் இருந்து ரிட்டயர்ட்!.

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஒன் டே மேட்ச்களில் இருந்து ரிட்டயர்ட்!.

ஸ்திரேலியா கிரிக்கெட் டீமின் ஸ்டார் பிளேயரான டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்காக டேவிட் வார்னர் தீவிரமாக தயாராகி வந்தார்.இவருக்கு கிராண்டியாக ஃபேர்வெல் கொடுப்பதற்காக ரசிகர்களும் தயாராகி வந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் வார்னர் கூறுகையில், ” 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்தேன். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வேறு சில லீக்குகளில் விளையாட முடியும். மேலும் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் மற்றும் மூன்று மகள்கள் ஐவி, இஸ்லா மற்றும் இண்டி ஆகியோருடன் நேரத்தை செலவிட விரும்புவதாக “கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதுதான் டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவை இரண்டு முறை உலக சாம்பியனாக்குவதில் டேவிட் வார்னர் தனது பங்கை ஆற்றியுள்ளார். 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த 2023 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

அண்மையில் உலக கோப்பையில் வார்னர் சிறப்பாக செயல்பட்டார். உலக கோப்பையில் டேவிட் வார்னர் 11 போட்டிகளில் 48.63 சராசரியில் 535 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக எம்.சின்னசாமி மைதானத்தில் 163 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோர் ஆகும். இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

37 வயதாகும் டேவிட் வார்னர், இன்னும் 3 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாட முடியும். அதனால் குடும்பத்தினருக்காக பணம் சேர்க்க அவர் ஓய்வு பெறலாம் என்று எடுத்த முடிவு சரியானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்த சில நிமிடங்களில் டெல்லி அணி நிர்வாகம் அவருக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் ஐஎல்டி20 லீக் தொடரில் துபாய் கேப்பிடல்ஸ் என்ற அணியை வாங்கியுள்ளது. இந்த அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!