அடல்ஸ் ஒன்லி பட தா(த்)தா நாயகரின் கவனத்திற்கு…!

அடல்ஸ் ஒன்லி பட தா(த்)தா நாயகரின் கவனத்திற்கு…!

மிழ் சினிமாவில், குறிப்பாக முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளும் பல வடிவங்களில் வன்முறையை அப்பட்டமாகச் சித்தரிப்பதும் அதிகரித்துவருவதை நம்மில் பலரும் அடிக்கடி சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்… !ஆனால் கதை, பாடல்கள், திரைக்கதைக்காக படங்கள் கொண்டாடப்பட்ட காலம் மாறி, அதிரடி அடிதடி சண்டைகளுக்காகவும், அதன் சவுண்ட் எஃபெக்ட்-களுக்காகவும் படங்கள் கொண்டாடப்படுவதுதான் இன்றைய நிலையா மாறிபுடுச்சு . ஃபீல் குட் திரைப்படங்களை விட அதிரடிப் படங்கள் அதிக வசூலைக் குவிப்பதா கணக்குக் காட்டறாய்ங்க. குறிப்பாக வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் எந்தவித தயக்கமும் இன்றி இளைஞர்கள் ஈடுபட்டு வருவதற்கு அடிப்படையாக இருப்பது சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள்தான் என்றால் அது கொஞ்சமும் மிகையல்ல.

அதே சமயம் குழந்தைகளைக் கவரும் நடிகர்களே உச்ச நட்சத்திர அந்தஸ்தைப் பிடிப்பாய்ங்க. இதற்கு இப்ப தாத்தா & அடல்ஸ் ஒன்லி நாயகன் ரஜினியைவிட மிகச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. 1980களில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘ராஜா சின்ன ரோஜா’ அப்படீன்னு குயந்தைகளை மையப்படுத்திய திரைப்படங்களிலும் அவர் நடிச்சிருக்கிறார். தலைமுறைகள் தாண்டி இன்னிவரை குழந்தைங்களுக்கும் மிகவும் பிடிச்ச நடிகராகத் திகழ்ந்து வாறார். ‘ஜெயிலர்’ படத்துக்குப் பலர் கைக்குழந்தைகளையும் பத்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளையும் அழைத்துவந்ததை பலரும் பார்த்தோம், அப்படி சமூகப் பொறுப்புமிக்க கலைஞராக அறியப்பட்ட 75 வயதை தாண்டிபுட்ட ரஜினியும் தங்கள் திரைப்படங்களில் இவ்வளவு அப்பட்டமான வன்முறைக் காட்சிகளுக்கு இடமளிப்பது அவர்களின் வயதுக்கும் அனுபவத்துக்கும் மக்களிடையே அவர்கள் பெற்றிருக்கும் நன்மதிப்புக்கும் அழகு சேர்க்கிறதா என்பது குறித்து யோசிக்கோணும். .

காரணம் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் சாதிய வன்முறைகள் 40 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன. அதாவது, வழக்கமாக ஆண்டுக்கு 1,400 – 1,500 வன்கொடுமை வழக்குகள் பதிவாகும் நிலையில், இப்போது 2,300 – 2,600 வழக்குகள் பதிவாகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், ஆண்டுக்கு 80 சாதியப் படுகொலைகள் நடந்திருக்கின்றன. அவற்றில், சுமார் 10 கொலைகள் சாதி ஆணவப் படுகொலைகள்தான். அதற்குரிய காரணங்களில் சினிமாவும் முக்கியமானது என்பதை உணர வேண்டும்.

நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட யங்க் டைரக்டர்களே டாப் ஸ்டார்நட்சத்திரங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை அதிகமாகப் பெறுறாய்ங்க. இவிய்ங்க வன்முறையை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த எந்தக் கவலையும் இல்லாத மூடர்களா இருக்கிறாய்ங்க. இவிய்ங்களின் வெற்றியைப் பார்த்து ஏனைய இயக்குநர்களும் இதே கத்தி, ரத்தப் பாதையில் பயணிச்சு தமது திரைப்படங்களில் வன்முறை உள்ளடக்கத்தை அதிகரிக்கிறாய்ங்க்..

முன்னொரு காலம் ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் வெற்றி, மதுரை வட்டாரத்தை ரத்தவெறி பிடித்த பூமியாகக் காட்டும் பல வன்முறைத் திரைப்படங்களுக்கு வித்திட்டதுபோல் இப்போது இவர்கள் இருவரின் படங்கள் தாதாக்கள், ரவுடிகள் தொடர்பான வன்முறையை மையப்படுத்திய திரைப்படங்களுக்கு வித்திட்டு கோலிவுட்டை ரத்தக் களறியாக்கிப்புட்டாய்ங்க.

கெட்ட வார்த்தைகள், அரசியல்ரீதியான சர்ச்சைக்குரிய வசனங்கள் , லோட்டஸ் ஆகியவற்றை நீக்குவதில் கறாராகச் செயல்படும் சென்சார் போர்ட், வன்முறைக் காட்சிகளுக்கு அத்தகைய கறார்த்தன்மையைக் கடைப்பிடிப்பதில்லை

அளவு கடந்த வன்முறைக் காட்சிகளைப் பார்த்துப் பழகுவது, குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குள்ளும் வன்முறை எதிர்ப்பு மனநிலையை நீர்த்துப்போக வைச்சுப்புடுது. அதுவும் நல்லவய்ங்களாச் சித்தரிக்கப்படும் ஹீரூக்கள் வயது வித்தியாசமின்றி சர்வசாதாரணமாக மனிதர்களைக் கொல்வது வன்முறையை இயல்பாக்கி கொண்டே போவ்ய்து;

ஒரு மனிதர் உயிரிழப்பதால் ஏற்படக்கூடிய பதற்றத்தையும் பரிவையும் நீர்த்துப்போக வைக்கிறது.

முன்பெல்லாம் ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்குக் கண்களை மூடிக்கொண்ட ரசிகர்கள் இப்போது தலை வெட்டப்பட்டு கீழே விழும் காட்சிக்குக் கைதட்டிச் சிரிக்கிறாய்ங்க. பெரும்பாலான சோ கால்ட் விமர்சகர்களும் சில பல’ படத்தில் தலை துண்டிக்கப்படும் காட்சியையோ தலையற்ற உடல் காட்டப்பட்டதையோ கழுத்தறுக்க்கும் சீனையோ பிரச்சினைக்குரியதாக அடையாளப்படுத்தலை. வன்முறையை நாம் எவ்வளவு சாதாரணமாகக் கருதத் தொடங்கிவிட்டோம் என்பதற்கான சான்றுகள் இவை.

வன்முறை சார்ந்த கதைகளை முற்றிலும் தவிர்க்க முடியாதுதான். ஆனால், வன்முறையைப் பூடகமாகவும் வரம்புமீறாமலும் வெளிப்படுத்த ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன. அவற்றைப் படைப்பாளிகள் கற்றுக்கொள்ளோணும்.

தணிக்கைத் துறையும் விமர்சகர்களும் வன்முறையைத் தடுப்பதிலும் கண்டிப்பதிலும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்ளோணும்.

கதைக்குப் பொருத்தமில்லாமலும் அதிர்ச்சி மதிப்பைக் கூட்டுவதற்காகவும் திரைப்படங்களில் திணிக்கப்படும் வன்முறையை வயதுவந்த பார்வையாளர்களும் எதிர்க்கோணும்.

பொழுதுபோக்காக பார்க்கப்படும் படங்கள், நம்மை சிரிக்க வைக்கலாம். ஒருபடி மேலேபோய் நல்ல கருத்துக்கள் மூலம் சிந்திக்கவும் வைக்கலாம்.

ஆனால், அதுவே நமது அடுத்த தலைமுறைக்கு வன்முறையால் மட்டுமே அனைத்தையும் சாதிக்கமுடியும் என்ற விதையை மனதில் தூவும் நோக்கில் வணிக நோக்கம் மட்டுமே கொண்ட சன் நெட் ஒர்க் ஈடுபடுவதில் ஆச்சரியமில்லை..

ஆனால் பக்கா தாத்தாவாகி விட்ட கோலிவுட்டில் 50 வருச கொட்டைப் போட்ட ரஜினியின் கேரியருக்கு இந்த புது அடல்ஸ் ஒன்லி படம் பெரும் கரும்புள்ளி என்பதை காலம் உணர்த்தும் என்பதே நிதர்சனம்!

கட்டிங் கண்ணையா!

error: Content is protected !!