தமிழக அசெம்பளியில் ஜி .எஸ். டி. பில் பாஸ்!

தமிழக அசெம்பளியில் ஜி .எஸ். டி.  பில் பாஸ்!

சட்டப்பேரவையில் கடும் அமளிக்கிடையே சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா கடந்த ஜூன் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிமுகம் செய்தார். இந்நிலையில் இன்று திமுகவின் எதிர்ப்பை தமிழக சட்டப்பேரவை யில் ஜிஎஸ்டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக இதனை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார். அந்த மசோதா சட்டமன்றத்தில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி மற்றும் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், ஜி.எஸ்.டி மசோதா நடைமுறைப்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வணிகர்களுடன் பேச்சுவார்த்தைக்கு பின்னரே நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது குறித்து நிதியமைச்சர் ஜெயகுமார் விரிவான விளக்கமளித்தார். அப்போது அவர் பேசுகையில் இந்தியா முழுவதும் சீராக வரிவிதிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜி.எஸ்டி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தில் சுயாட்சி பாதிக்கப்படக்கூடாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவு மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதனால் ஜி.எஸ்.டிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். மாநிலத்தின் சுயாட்சி அதிகாரம் காப்பாற்றப்பட வேண்டும், உற்பத்தியை பெருக்க வேண்டும், விலைவாசி கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளோடு ஜி.எஸ்.டியை ஆதரிக்க ஒப்புக்கெண்டோம்.

மத்திய மாநில அரசுகள் மட்டுமே ஜி.எஸ்.டியை கொண்டு வரவில்லை. எல்லா மாநிலங்களும் சேர்ந்த ஜி.எஸ்.டி கவுன்சில்தான் இந்த மசோதாவை கொண்டு வந்தது. இதனால் வணிகர்கள் அச்சமடைய தேவையில்லை. ஜி.எஸ்டியால் யாரும் பாதிக்கப் படமாட்டார்கள். ஏதேனும் பிரச்னையிருந்தால் மறு பரீசிலனை செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பதிலில் வணிகர்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு இது, பாராளுமன்றத்தில் இந்த மசோதா கொண்டு வரும்போது அதி.மு.க வெளிநடப்பு செய்தது. 25 மாநிலங்கள் ஜி.எஸ்டிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதலில் எதிர்த்த காங்கிரசும் இது ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே இந்த மசோதாவை நிறைவேற்றித்தரவேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து தங்களது கோரிக்கை ஏற்காதபடாததால் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் திடீரென அவையிலிருந்து வெளியேறினர். இதையடுத்து உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஜி.எஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!