AI- தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ டீச்சர் ஐரிஷ்!- வீடியோ!

AI- தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ டீச்சர் ஐரிஷ்!- வீடியோ!

ர்வமும் நவீன மையமாகும் இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு துறைகளில் அதிக வேகமாக நடந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களை போல சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் செயல்படவும் முடியும் என கூறப்படுகிறது. AI கருவிகளின் உதவியுடன் மக்களை கவரும் விதமாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கபடுகின்றன. காலப்போக்கில், இது நம் வாழ்வின் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அண்மையில், அமெரிக்காவில் 18 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை செயற்கை நுண்ணறிவு (AI) பேச உதவியுள்ளது. இந்நிலையில், இது மருத்துவ துறையில் மிக பெரிய அதிசயமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது  ஏகப்பட்ட அதிசயங்களை படைத்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த கல்வி நிறுவனம் மேக்கர்லேப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து “ஐரிஸ்” என்ற ஏஐ ஆசிரியரை உருவாக்கியது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவின் முதல் AI ஆசிரியர் ரோபோ இது என்ற பெருமையை பெற்றுள்ளது.

கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், கற்றலை இன்னும் சிறப்பாக்கவும், மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘ஐரிஸ்’ என்ற பெயரில் மனித இயல்பு கொண்ட ரோபோ ஆசிரியரை வடிவமைத்திருக்கிறது. இந்த AI ஆசிரியர் ரோபோ தொடங்கப்பட்ட பிறகு, தொழில்நுட்ப நிறுவனம் தனது சமுக வலைதளத்தில் அந்த AI ஆசிரியர் பற்றிய ஒரு வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது.

இதில், இந்த ரோபோவால் மூன்று வெவ்வேறு மொழிகளில் தொடர்பு கொள்ள முடியும் மற்றும் கடினமான கேள்விகளுக்கும் இந்த ரோபோவால் பதிலளிக்க முடியும் என தெரிவித்தனர். AI ஆசிரியரான ஐரிஸின் தனிப்பட்ட குரல் உதவி, கையாளுதல் திறன்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுலபமாகக் கற்பித்தல் ஆகிய தனிபட்ட திறமைகளுடன் இந்த செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் நகர்வை செயல்படுத்த சக்கரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவால் கல்வித்துறையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் மாணவர்கள் கற்றலை மிகவும் ஈடுபாட்டுடன் அணுகக்கூடியதாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் இனி ஆசிரியர்களுக்கு பதிலாக AI ரோபோக்கள் பாடம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!