ஆதார் அட்டை ரொம்ப அவசியம்தான்! – ஆனா வேண்டாம்! – மத்திய அரசு பதில்

ஆதார் அட்டை ரொம்ப அவசியம்தான்! – ஆனா வேண்டாம்! – மத்திய அரசு பதில்

மாநிலங்களவை நேற்று கூடியதும், வழக்கமான அலுவல் களை ஒத்தி வைத்து, ஆதார் கட்டாயமாக்கப்படுவது தொடர் பான பிரச்சினையை விவாதிக்க திரிணமூல் காங்கிரஸ், பிஜுஜனதா தளம், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. இதனை மாநிலங்களவை அவைத் தலைவர் நிராகரித்தார்.

aadhar jy 30

குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் எண், அரசு சலுகைகளைப் பெறுவதற்கு கட்டாயமில்லை. இதுதொடர்பான போதுமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதனை எதிர்க் கட்சியினர் ஏற்க மறுத்து அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது: “நாடு முழுவதும் இதுவரை 103 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையைப் பெறாதவர்களின் பெயர்கள் தனியாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆதார் எண் அளிக்கப்படும் வரை, மானியங்கள் உள்ளிட்ட அரசின் நலத் திட்ட உதவிகள் மாற்று வழிகளில் வழங்கப்படும்.ஆதார் அட்டை மூலம் ஊழல் ஒழிக்கப்படும். அத்துடன், அரசு அளித்துவரும் மானியத் தொகைகள், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும்”

Related Posts

error: Content is protected !!