ரஷ்யாவில் கொரோனாவால் 500 டாக்டர்கள் உயிரிழப்பு!

ரஷ்யாவில் கொரோனாவால் 500 டாக்டர்கள் உயிரிழப்பு!

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா வால் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 7,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 500 பேர் டாக்டர்கள் என்பது தெரிய வந்து உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை அரசு முறையாக கையாளவில்லை என குற்றச் சாட்டுகள் நீடிக்கும் நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரஷ்யாவில் நிலைமை படிப்படியாக கட்டுக்குள் வருகிறது என பிரதமர் மிசுஸ்டின் கூறியுள்ளார்.

உலக நாடுகளைப் போலவே ரஷ்யாவிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் மிக்கைல் மிசுஸ்டினுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், மாஸ்கோவில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை தலைமை டாக்டருக்கும் கொரோனா உறுதி செய்யப் பட்டது. இந்த இருவரையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்துள்ளார். இதை அடுத்து, அதிபர் புடின் தனக்கு கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என்ற எண்ணத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன்படி, அவர் கிரிம்லின் மாளிகையை விட்டு வெளியேறி மாஸ்கோவிற்கு வெளிப்புறத்தில் உள்ள அதிபர் குடியிருப்பில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆனாலும், அந்த குடியிருப்பில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளும் புடின் சில சமயங்களில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவ்வாறு பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் புடின் எந்தவித முகக்கவசமும் அணியாமல் சாதாரணமாகவே இருக்கிறார்.

இந்நிலையில், அதிபரை சந்திக்க அதிகாரிகள், தொழில்துறையினர் என பலர் புடின் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு வந்து செல்கின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவிவிடலாம் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு அதிபர் புடினை சந்திக்க அவரும் அனைவரும் சந்திப்பிற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என அதிபரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அதிபரின் குடியிருப்பு அவரை சந்திக்க வருபவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரத்தின் வழியாகவே வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலமாக புதின் கொரோனா வைரசில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள விரும்புவதாக பரவலான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இப்போதைய நிலையில் இந்த நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலை யில் உள்ளது, பிரேசில் 2-வது மற்றும் ரஷ்யா 3-வது இடத்திலும் உள்ளது. ரஷ்யாவின் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,246 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,660 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 561,091 ஆக அதிகரித்துள்ளது.

error: Content is protected !!