குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம் :மும்பை ‌ஹைகோர்ட் வேதனை:

குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம் :மும்பை ‌ஹைகோர்ட் வேதனை:

கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஹைகோர்ட் வேதனையுடன் தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பாம்பு கடித்தும், தேள் கடித்தும், காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது.
sep 5 - Maharasra_school_640
மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரம பள்ளிகளின் நிலை குறித்து அறிய நாசிக்கை சேர்ந்த ரவீந்திர டல்ப் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஹைகோர்ட் நீதிபதிகள் பி.வி.ஹர்தாஸ், பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது விளக்கம் அளிக்கவும் இது போன்ற மர்மமான முறையில் நடைபெறும் மரணங்களை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

மேலும் விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”இது போன்ற இறப்புக்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை; ஆசிரம பள்ளிகளில் வாழும் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது; ஒவ்வொரு ஆசிர பள்ளிக்கும் ஒரு மருத்துவ அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும்; ஆசிரம பள்ளிகளில் காலியாக உள்ள 185 காலி பணியிடங்கள் செப்டம்பர் 13ம் தேதிக்குள் நிரப்பப்பட வேண்டும்”என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில் மகாராஷ்டிராவில் சுமார் 1100 குருகுல பள்ளிகள் உள்ளது. இதில் 4.50 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றவர். இவர்களில் பெரும்பாலானோர். பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பாம்பு கடித்தும், தேள் கடித்தும், காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 453 பேரின் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் 340 குழந்தைகளின் பெற்றோர்கள் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

793 deaths in ashram schools across Maharashtra in 10 years
*****************************************************************************
Asserting that measures taken were inadequate, the Bombay High Court on Wednesday expressed unhappiness over the steps taken by Maharashtra government to prevent death of tribal students studying in ashram schools in the state due to alleged negligence of staff. A division bench of Justices P V Hardas and P N Deshmukh was hearing a PIL that alleged death of 793 children in the last one decade due to snake bites, scorpion bites, fever and minor illness.

Related Posts

error: Content is protected !!