எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கும் தீர்ப்பு.:மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..!

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கும் தீர்ப்பு.:மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..!

தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனேயே பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இருப்பினும் கிரிமினல் வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, மறுசீராய்வு செய்யக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
sep 4 - supreme court
குற்றவழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழப்பர் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுவை மத்தியஅரசு தாக்கல் செய்திருந்தது. மத்தியஅரசின் மறுஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. மறுஆய்வு மனு மீதான உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 543 எம்.பி.க்களில் 162 பேர் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். அதுபோல நாடு முழுவதும் உள்ள 4032 எம்.எல்.ஏ.க்களில் 1258 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். ஆக மொத்தம் 1420 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள் கடத்தல், மிரட்டல், கற்பழிப்பு, நிலம் அபகரிப்பு, லஞ்சம் வாங்கியது என ஏராளமான வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது.

இதில் எம்.பி.க்களில் 14 சதவீதம் பேர் மீதும், எம்.எல்.ஏ.க்களில் 14 சதவீதம் பேர் மீதும் மிக கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. அதாவது இந்த வழக்குகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனையைப் பெற்றுத் தரும் வகையிலான வழக்குகளாக உள்ளன. இதுதான் பெரும்பாலான கட்சிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

குற்ற பின்னணி உள்ள 1,420 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் மீது தீர்ப்புகள் அடுத்தடுத்து வர உள்ளன. இதனால் எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லா கட்சிகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.ஆனால், அரசியலில் உள்ள ரவுடிகள், சுயநலவாதிகளை விரட்ட, இந்த தீர்ப்பு உதவும் என்பதால் தேர்தல் கமிஷன் இதை வரவேற்றுள்ளது. அது போல பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் மகிழ்ச்சியுடன் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இதற்கிடையில் இது தொடர்பாக, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்த மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தது.இதனையடுத்து, தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம். ஆனால், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது என திருத்தப்பட்ட மசோதா உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை சீராய்வு செய்யக்கோரும் மத்திய அரசின் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.அப்போது மத்திய அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் உருவாக்கிய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (திருத்த) மசோதாவை சுட்டிக் காட்டிய நீதிபதி, ‘எங்கள் உத்தரவில் பெரும் பகுதியை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான தீர்ப்பை இந்த கோர்ட் சீராய்வு செய்யும். சிறையில் உள்ள ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியும். அதே சமயத்தில், சிறையில் உள்ள ஒரு வாக்காளர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பது எந்த வகை சட்டத்தை சேர்ந்தது என்பது புரியவில்லை.மேலும் இது தொடர்பாக இந்த கோர்ட் சீராய்வு செய்யும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Supreme Court rejects review of its verdict against convicted lawmakers
********************************************************************************************
The Supreme Court on Wednesday rejected the Centre’s plea seeking review of its verdict on disqualification of MPs and MLAs on being convicted in criminal cases.

Related Posts

error: Content is protected !!