இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் இந்திய ஒலிம்பிக் கழகத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும் என்பது விதிமுறை. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், இதனை ஏற்றுக் கொள்வதாக கூறிய இந்திய ஒலிம்பிக் கழகம், அதில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மாற்றி அமைத்துக் கொள்ளும் பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்திடம் வைத்தது.ஆனால் இந்திய ஒலிம்பிக் கழகத்தின் பரிந்துரையை ஏற்க சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
sep 5 - i o c logo
சர்வதேச விதிப்படி தேர்தல் நடத்தாத இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கடந்த 2012 டிசம்பரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை செய்தது.தவிர, “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள், ஒலிம்பிக் சங்க தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தெரிவித்தது.இதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். ஆனால், இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. தவிர, இந்திய சட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், தேர்தலில் போட்டியிடலாம் என உள்ளது என்பதை தெரிவித்தது.

இந்நிலையில்அண்மையில் நடைபெற்ர இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், குற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் தேர்தலில் போட்டியிடலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட முடியாது முடிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்கஸ் ரோஜருக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீடிக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் மல்ஹோத்ரா கூறுகையில், “நமது வீரர்கள் பதக்கம் வெல்லாதது, விளையாட்டு அரங்கில் நமது நாட்டு தேசியக்கொடி பறக்காதது வேதனை அளிக்கிறது. இந்த தடை நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படும்” என்றார்.

nternational Olympic Committee refuses to admit India into its fold
**************************************************************************************
ndia will continue to remain out of the Olympic fold as the International Olympic Committee (IOC) has rejected the request of the suspended Indian Olympic Association (IOA) to allow charge-sheeted officials to continue in and run for office.The IOC executive board met on Wednesday in Buenos Aires and decided that the ban on IOA will continue if the apex body for sports in India doesn’t change its constitution to keep out charge-sheeted individuals.

Related Posts

error: Content is protected !!