ஷாங்காய் மாநாடு – சீனா சென்றார் பிரதமர் மோடி

ஷாங்காய் மாநாடு – சீனா சென்றார் பிரதமர் மோடி

புது டெல்லி: பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக சீனா புறப்பட்டார். தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, கஜகஸ்தான், ரஷியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்புக்கான மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

சீனாவில் சில முக்கிய இடங்களை பார்த்துவிட்டு, அதன்பின் ஜின்பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். எல்லையில் சண்டை குறித்தும், டோக்லாம் பகுதியில் சீனா எல்லை மீறுவது குறித்தும் இதில் விவாதம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களின் வர்த்தகம் குறித்தும் பேசப்பட இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு வரும் மற்ற நாட்டு தலைவர்களையும் மோடி சந்தித்து உரையாடுகிறார்.

error: Content is protected !!