பெண்கள் ஆசியகோப்பை டி20: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா | பாகிஸ்தான் தோல்வி

பெண்கள் ஆசியகோப்பை டி20: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா | பாகிஸ்தான் தோல்வி

கோலாலம்பூர் : பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைப்பெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

நஹிடா கான், சானா மிர் ஆகியோர் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள்  மிக குறைந்த ரன்கள் மட்டும் எடுத்து, 20 ஓவரில் 7 விக்கெட், 72 ரன் என்ற நிலையில் பாகிஸ்தான் நின்றது.

இந்திய அணிக்கு தொடக்கம் தந்த மிதாலி ராஜ், ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய தீப்தி சர்மாவும் ரன் எடுக்காமல் அவுட்டானார்.

ஜோடி சேர்ந்த மந்தனா 38, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்கள் எடுக்க, இந்தியா 16.1 ஓவரில் 75 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால், ஆசியகோப்பை பெண்கள் டி20 போட்டியில் இந்தியா முதல் நாடாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோத வாய்ப்புள்ளன.

லீக் போட்டிகளில் இதுவரை மலேசியா அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. வங்கதேச அணி இந்திய அணியை வீழ்த்தி 4ல் 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் இன்று மலேசியா அணியுடன் வங்கதேச அணி மோத உள்ளதால், வெற்றி வாய்ப்பு வங்கதேச அணிக்குதான் அதிகம் என்பதால் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோத அதிக வாய்ப்புள்ளது.

error: Content is protected !!