பினராயி விஜயன் மகளின் திருமணம் – எளிமையாக நடந்து முடிந்தது!.

பினராயி விஜயன் மகளின் திருமணம் – எளிமையாக நடந்து முடிந்தது!.

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகளும், தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோருமான வீணாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் முகமது ரியாஸை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வரின் இல்லத்தில் எளிய முறையில் நடந்தது.

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி, குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர் மட்டுமே திருமண விழாவில் பங்கேற்றனர். குடும்ப உறுப்பினர்கள், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலிவர் சஜீஷ் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

மாணவராக இருந்தபோது அரசியலில் நுழைந்து, சி.பி.ஐ.(எம்)-இன் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐயின் முன்னாள் தேசிய இணைச் செயலாளராக இருந்த ரியாஸ், கடந்த பிப்ரவரி 2017 இல் DYFI- இன் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஆவார். அதேபோல, தொழில்முனைவோரான வீணா தைக்கண்டியில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!