நாங்க ரொம்ப நல்லவங்கய்ங்களாக்கும்!- வாட்ஸ் அப் விளக்கம்!

நாங்க ரொம்ப நல்லவங்கய்ங்களாக்கும்!-  வாட்ஸ் அப் விளக்கம்!

வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது என வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவிச்சிருக்குது. தனிநபர் தகவல்கள் முகநூல் நிறுவனத்துக்கு தரப்பட மாட்டாது என்றும் வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அண்மையில் வாட்ஸ்அப் அறிவித்த புது பிரைவசி பாலிசிக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியதுடன் , பலரும் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவிச்சு வாராங்க.

இந் நிலையில், வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம் அளித்து உள்ளது.

-வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் அனுப்பும் தனிப்பட்ட குறுந்தகவல்களை பார்க்கவோ அல்லது அழைப்புகளை கேட்கவோ செய்யாது.

– குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் அழைப்பை மேற்கொள்வது யார் என்பதை வாட்ஸ்அப் கண்காணிக்காது.

– வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் பகிர்ந்து கொள்ளும் லொகேஷனை பார்க்க முடியாது.

– வாட்ஸ்அப் பயனரின் காண்டாக்ட்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளாது.

– வாட்ஸ்அப் குரூப்கள் தொடர்ந்து தனியாகவே செயல்படும்.

– குறுந்தகவல் மறைந்து போக செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

– பயனர் தங்களின் டேட்டாவை டவுன்லோட் செய்ய முடியும்.

அப்படீன்னு இப்ப வாட்ஸ்அப் தெரிவிச்சு இருக்குது.👇

Related Posts

error: Content is protected !!