ட்ரம்ப் – கிம் ஜாங் சந்திப்பு : சிங்கப்பூரின் விமான போக்குவரத்தில் கட்டுப்பாடு!

ட்ரம்ப் – கிம் ஜாங் சந்திப்பு : சிங்கப்பூரின் விமான போக்குவரத்தில் கட்டுப்பாடு!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் (மரண பயத்திற்கிடையே) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான, வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின்போது, சிங்கப்பூர் வான்பகுதியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவும், வடகொரியாவும் அணுஆயுதத் திட்டங்களைக் கைவிடுதல் தொடர்பாக, வரும் 12-ம் தேதி இந்த இரு நாடுகளின் தலைவர்களும் சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இச் சந்திப்பின்போது, சிங்கப்பூர் வான்பகுதியில் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவந்த மோதல்கள் முடிவுக்கு வந்து தற்போது சுமுகமான சூழல் உருவாகியுள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்பட்டுள்ளது. தென்கொரியா மற்றும் சீனா மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே, இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.

உலக நாடுகள் மிகுந்த ஆவலுடன் உற்று நோக்கியுள்ள இந்த சிறப்புமிகு நிகழ்வை  ஜூன் 12-ஆம் தேதியன்று சிங்கப்பூரின் செந்தோசா தீவில்  நடைபெறவிருக்கிறது. சந்திப்புக்கான ஏற்பாடுகளை சிங்கபூர் அரசு மேற்கொண்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!