குரல் எழுப்புகிறார் சச்சின் – இவங்களுக்குலாம் நிறைய வாய்ப்பு கொடுங்க

குரல் எழுப்புகிறார் சச்சின் – இவங்களுக்குலாம் நிறைய வாய்ப்பு கொடுங்க

ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய  அணிகளுக்கு அனுபவம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக நிறைய போட்டிகள் ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அணிகள், அனுபவமாகவும் சிறப்பாகவும் விளையாடும் அணிகளையே சில சமயங்களில் தோற்கடிக்கின்றன. உலக கோப்பைக்கு தகுதி பெரும் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வென்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.

ஆஃப்கானிஸ்தான் அணி ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய தரம்வாய்ந்த ஸ்பின்னர்களை கொண்டுள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான், முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. வரும் 14ம் தேதி பெங்களூருவில் இந்த போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியை ஆஃப்கானிஸ்தான் அணி ஆவலாக எதிர்நோக்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில், இந்தியாவை வீழ்த்த துடிப்பாக இருக்கிறது ஆஃப்கானிஸ்தான்.

ஆனால் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்வதில் கைதேர்ந்த வீரர்களையும் தரமான பவுலர்களையும் கொண்ட இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. இதை ஆஃப்கானிஸ்தான் அணியும் உணர்ந்திருந்தாலும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் முனைப்பில் அந்த அணி உள்ளது.

அதே போல ஸ்காட்லாந்து அணியும் தனது விளையாட்டு முறையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ODI-இல் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்தி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 371 ரன்கள் குவித்த ஆஃப்கானிஸ்தான் அணி, 365 ரன்களுக்கே இங்கிலாந்தை சுருட்டி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்டிங், பௌலிங், பீல்டிங், என மூன்றிலும் ஸ்காட்லான்ட் அணி பிரமிப்பாக விளையாடி வெற்றிபெற்றது.

இதை போல் ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய  அணிகள் அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி முன்னேறுகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய கத்துக்குட்டி அணிகளுக்கு அனுபவம் வாய்ந்த அணிகளுடன் அதிகளவில் போட்டிகளை தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற கத்துக்குட்டி அணிகளுக்கு அனுபவம் வாய்ந்த அணிகளுடன் அதிகமான அளவில் பொட்டிகளை தருவது, அவர்களின் திறமையை வெளிபடுத்துவதற்கு  சிறந்த வழியாகும் என்று தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

 

Related Posts

error: Content is protected !!