ஒரே நாடு, ஒரே சந்தை – 3 அவசரச் சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

ஒரே நாடு, ஒரே சந்தை – 3 அவசரச் சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

பலக்கட்ட முயற்சிகளை அடுத்து விவசாயிகளின் வருவாயை பெருக்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 3 அவசரச் சட்டங்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

விவசாயிகளின் நலனுக்காக ‘ஒரு நாடு ஒரே சந்தை’யை ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இச்சட்டத்திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இச்சட்டம் உடனடியாக அமலானது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை.

இச்சட்டத்தை பிரகடனப்படுத்தியதன் மூலம் விவசாயிகளின் நலனுக்காக, பல விவசாய பொருட்கள் இச்சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கப்படும். விவசாயிகளின் பணிகள் எளிமையாக்கப்படுவதோடு அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.

விவசாயிகள் நேரடியாக தங்களது உற்பத்தி பொருட்களை வெளிமநிலங்களில் விற்கவும், முன்கூட்டியே விலையை நிர்ணயித்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு மொத்த வியாபாரிகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்

எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளை ஆகியவை அத்தியாவசியப் பொருட்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

error: Content is protected !!