வரப் போகும் தேர்தலில் போட்டி உறுதி!- ரஜினி ஓப்பன் வாய்ஸ்!

வரப் போகும் தேர்தலில் போட்டி உறுதி!- ரஜினி ஓப்பன் வாய்ஸ்!

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கும் மேலான தாமதங்கள், தயக்கங்கள், குழப்பங்கள் ஆகிய வற்றைத் தாண்டி ஒருவழியாக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக (மறுபடியும்) அறிவித்து உள்ளார். இது குறித்து இன்று திடீரென்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ என்றும் மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் மற்றும் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’என்கிற ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.அத்துடன், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புத.. அதிசயம்..நிகழும்’ என பதிவிட்டுள்ளார்.

இதை அடுத்து வர இருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் அது மக்களுடைய வெற்றி, தோல்வி அடைந்தால் அது மக்களுடைய தோல்வி. அரசியல் கட்சி தொடங்குவது காலத்தின் கட்டாயம், இதில் தமிழ்நாட்டு மக்களுக்காக எனது உயிரே போனாலும் சந்தோசம் தான் என நடிகர் ரஜினிகாந்த் இன்று பேட்டியில்அதிரடியாகக் கூறியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி இதோ:.

2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நான் அரசியலுக்கு வருவேன் என அறிவித்தேன். 2021 சட்டமன்ற தேர்தலில் என் கட்சி போட்டியிடும் என தெரிவித்தேன். கொடுத்த வாக்கை நான் காப்பாற்றியுள்ளேன். சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்க திட்டமிட்டேன். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய முடிய வில்லை. மேலும், மருத்துவர்களின் ஆலோசைனைப்படி நான் செயல்பட வேண்டியதாகிவிட்டது.

சிங்கப்பூரில் நான் சிகிச்சை பெற்று உயிர் பெற்று திரும்ப தமிழக மக்களின் பிரார்த்தனையே காரணம். எனவே, அவர்களுக்காக என் உயிர்போனாலும் பரவாயில்லை. தமிழகத்தில் ஆட்சி மற்றும் அரசியல் மாற்றம் ஏற்பட்டே ஆகவேண்டும். அது கண்டிப்பாக நடக்க வேண்டும். இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை. நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. தோற்றால் மக்களின் தோல்வி. மக்கள் எனக்கு துணை நிற்க வேண்டும்’ என உருக்கமாக பேசினார்.மேலும், அண்ணாத்தே படப்பிடிப்பை முடிப்பது என் கடமை.. அதை முடித்துவிட்டு அரசியல் பணிகளைது துவங்குவேன் என தெரிவித்தார்.

இதனிடையே கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப் பட்டுள்ளார். என்மீது மாற்று கருத்து இருந்தபோதும், இவர் என்னைவிட்டு பிரியவில்லை என தமிழருவி மணியன் குறித்து ரஜினிகாந்த் கூறினார். அத்துடன் ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தியை அறிமுகப்படுத்தினார் ரஜினி.

error: Content is protected !!