நோபல் : பொருளாதாரத்துக்கான பரிசு அறிவிப்பு! யாருக்கு? என்னக் காரணம்?

நோபல் : பொருளாதாரத்துக்கான பரிசு அறிவிப்பு! யாருக்கு? என்னக் காரணம்?

நடப்பு ஆண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் அறிவிக்கப் பட்டு வருகிறது. மற்ற துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக ஆய்வாளர்கள் பால் ஆர்.மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பொருளாதாரத்தில் ஏலம் விடும் நடைமுறை எவ்வாறு நடக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பண்டங்கள், பணிகளைப் பாரம்பரிய முறையில் விற்பனை செய்வது கடினமாக இருக்கும் நிலையில் அதை ஏலம் விடுவதற்குப் புதிய முறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக ரேடியா அலைவரிசைகளை விற்பனை செய்வது கடினமாக இருக்கும் நிலையில் அதை ஏலம் விடும் முறையில் புதிய முறையைக் கண்டறிந்தனர். இருவரின் கண்டுபிடிப்பு உலகமெங்கும் இருக்கும் வாங்குவோருக்கும், விற்போருக்கு்ம், வரிசெலுத்துவோருக்கும் நன்மையளிக்கிறது.

இதில் பொருளாதார வல்லுநர் ராபர்ட் வில்ஸன், கண்டறிந்த ஏலக் கோட்பாட்டில் பொதுவான மதிப்பை அடிப்படையாக வைத்து புதிய ஏலக் கோட்பாட்டைக் கண்டுபிடித்துள்ளார். அந்த பொதுவான மதிப்பு தொடக்கத்தில் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், இறுதியில் பொதுவானதாக இருக்கும்.

பால் மில்க்ரோம் கண்டறிந்த ஏலக் கோட்பாட்டில் பொதுவான மதிப்புகளை மட்டும் அனுமதிக்காமல், தனிப்பட்ட மதிப்புகளையும் அனுமதிக்கிறார். ஏலம் கேட்க வரும் ஒவ்வொருக்கும் இடையே இது மாறுபடும். அதுமட்டுமல்லாமல் ஏலம் கேட்கவருவோர் கையாளும் முறைகள், ஏலம் முறைகள், ஏலம் விடுவோருக்கு அதிக வருவாய் கிடைக்க வேண்டும், வாங்குவோருக்கும் நியாயமான விலையில் இருக்க வேண்டும் என்பதையும் பால் மில்க்ரோம் ஆய்வு செய்துள்ளார்.

பால் மில்க்ரோம், வில்ஸன் இருவரும் கண்டறிந்த ஏல முறையின் அடிப்படையில்தான் கடந்த 1994-ம் ஆண்டு அமெரிக்க அதிகாரிகள், ரேடியோ அலைவரிசையைத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தனர். இதே முறையைத்தான் மற்ற நாடுகளும் பின்னர் பின்பற்றத் தொடங்கினவாம்.

error: Content is protected !!