தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்து துவங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மாநிலங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

இந்நிலையில் மாநிலத்துக்குள் ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பல்வேறு தளர்வுகளை அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் ரயில் சேவை துவங்கப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து கோவை, திருச்சி, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி நகரங்களுக்கும், கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கும் என மொத்தம் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். ரயில் பயண நேரம் உள்ளிட்ட விவரங்களை ரயில்வே இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். டிக்கெட் உறுதிசெய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கான பெட்டி இருக்காது. ரயில் நிலையத்துக்குள் நுழையும்போதும், பயணத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம். 90 நிமிடங்கள் முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்துசேர வேண்டும்.

ரயிலில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கப்பட மாட்டாது. குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் வெப்பநிலை தேவையான அளவுக்கு ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!