ஜனவரி 15 To 17 – கடற்கரைகள், பூங்காக்களில் அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

ஜனவரி 15 To 17 – கடற்கரைகள், பூங்காக்களில் அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும ஜனவரி 15ந்தேதி முதல் 17ந்தேதி வரை கடற்கரைகள், பூங்காக்கள் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.’ ஏற்கனவே காணும் பொங்கல் அன்று மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 நாட்கள் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் இன்னும் சில காலம் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார வல்லுநர்களும், மத்திய மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், பொங்கல் விடுமுறை நாள்களில் கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க காணும் பொங்கல் அன்று (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது பொங்கல் விடுமுறையொட்டி ஜனவரி 15 முதல் 17 வரை கடற் கரைகள், பூங்காக்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொங்கல் விடுமுறை நாள்களான ஜனவரி 15 முதல் 17 வரை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகள், வண்டலூர் பூங்கா, கிண்டி தேசிய பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்கள் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!