AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

சார் போஸ்ட் – உலக தபால் தினம்!

By admin | Oct 09, 2025

இன்று நாம் உள்ளங்கையில் அடங்கிவிட்ட வாட்ஸ் அப், இ-மெயில் போன்ற அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் நொடிப்பொழுதில் உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் தொடர்பு கொள்கிறோம். ஆனால், இவற்றுக்கெல்லாம் மூத்த தகவல் தொடர்புக் கருவியாக, ஒரு காலத்தில் அன்பையும், பாசத்தையும், செய்திகளையும் சுமந்து, இதயங்களை இணைக்கும் ஒப்பற்ற சேவையை ஆற்றியது அஞ்சல் என்னும் தபால் சேவையே ஆகும்.

அஞ்சல்துறையின் சர்வதேசப் பங்களிப்பை நினைவுகூரும் வகையிலும், அதன் மகத்தான சேவையைப் போற்றும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக தபால் தினம் (World Post Day) கொண்டாடப்படுகிறது. 1874 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பொது அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union – UPU) நிறுவப்பட்டதைக் குறிக்கும் விதமாக, 1969 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரோலண்ட் ஹில் முதல் ஹென்ரிச் வான் ஸ்டீபன் வரையிலான அறிஞர்களின் முயற்சிகளால் உருவான இந்த சர்வதேச அமைப்பு, நாடு, மொழி, இனம் போன்ற வேறுபாடுகளைக் களைந்து, உலகை ஒரே அஞ்சல் பிரதேசமாக மாற்றியதன் வரலாற்றையும், தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் மத்தியில் அஞ்சல் துறை சந்திக்கும் சவால்களையும், அதன் நீடித்த முக்கியத்துவத்தையும் இந்த நாளில் விரிவாக தெரிந்து கொள்வோமா?.

அஞ்சலின் சமூகப் பண்பாட்டுப் பங்கு

தொழில்நுட்பத்தின் வருகையால் ஏற்பட்ட மாற்றம் 

பல பரிணாமம் : பழங்ககாலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன. மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. பின் தகவல்கள் தபால் துறை மூலமாக பரிமாறப்பட்டன.

தபால் சேவையின் பின்னணி மற்றும் வரலாறு

 சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை, அன்பொழுக வார்த்தைகளை பயன்படுத்தி நட்புகளும், உறவுகளும் முத்து முத்தாய் நமக்கு எழுதிய கடிதங்கள் 3 நாட்கள் கழித்தே கைக்கு வந்து சேர்ந்தது. அதை பிரித்து, படித்து, ரசித்தபோது ஏற்பட்ட  பரவசமும், புத்துணர்வும் இப்போது இல்லை என்பதும் உண்மை. ஆம்… அஞ்சல் என்னும் கடிதங்கள் வாழ்வில் அனைத்து தருணங்களிலும் நம்மிடம் வலம் வந்தது. நட்பு, பாசம், கோபம், தாபம், காதல், மோதல் என்று அனைத்தையும் கொட்டித்தீர்க்கும் வடிகாலாகவும் இருந்ததே இதற்கான காரணம். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். இன்றைய தகவல்களும் கூட நாளைய சமுதாயத்திற்கான வரலாறாக மாறும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் கரங்களில் எழுதுகோல் தாங்கி கடிதங்களை தீட்டுவோம். இதன்மூலம் மொழிக்கான விடிவெள்ளியாக இருந்து அதற்கு ஒளியூட்ட இனிய நாளில் உறுதியேற்க வேண்டும் என்கின்றனர் காலம் கடந்தும் கடிதங்களை நேசிக்கும் நமது முன்னோடிகள்.

நிலவளம் ரெங்கராஜன்