AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

’வித் லவ்’ – விமர்சனம்!

By admin | Feb 04, 2026

முதல் காதல் – அது சொல்லாமலே புரியும் ஒரு மொழி. கண்கள் தற்செயலாக சந்திக்கும் அந்த ஒரு நொடியில், இதயம் தன் வேகத்தை மறந்துவிடும். பலருக்கும் கை கூடாமல் போயிருக்கும் அந்த அழகான உணர்வுகளை, வலிமிகுந்த அனுபவங்களாகச் சொல்லாமல், மகிழ்ச்சியோடு கடந்து செல்லக்கூடிய இனிமையான தருணங்களாக வெள்ளித் திரையில் ஃப்ரண்ட்லி டோனுடன்  கொண்டு வந்திருக்கிறார்கள் ‘வித் லவ்’ படக்குழுவினர். அந்த வகையில் இரண்டரை மணி நேரம் இளமை துள்ளலோடு ஒரு ஹேப்பி பயணத்தை இந்தப் படம் உறுதி செய்கிறது.

கதை

இன்றைய ‘Gen Z’ இளைஞனாக வலம் வருகிறார் சத்யசீலன் (அபிஷன் ஜீவிந்த்). சொந்த வீடு, கைநிறைய சம்பளம் என ஜாலியாக இருக்கும் அவருக்கு, எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் எனத் துடிக்கிறார் அவர் அக்கா. விருப்பமே இல்லாமல் பெண் பார்க்கச் செல்லும் சத்யாவிற்கு, இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான மோனிஷாவை (அனஸ்வரா ராஜன்) அறிமுகம் செய்கிறார்கள்.

இருவரும் பேசத் தொடங்கும்போது, தாங்கள் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரியவருகிறது. தங்கள் பள்ளிப்பருவக் காதல் கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். சத்யா, தான் காதலித்த அனிஷாவிடம் தன் காதலைச் சொல்லத் தவறியதையும், மோனிஷா தனக்கு பிடிந்த பாலாஜியைப் பிரிய நேரிட்டதையும் கூறுகிறார்கள். இறுதியில் மோனிஷா ஒரு ஐடியா கொடுக்கிறார்; “நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம பழைய காதலர்களைக் கண்டுபிடிச்சு, நம்ம மனசுல இருந்ததைச் சொன்னா என்ன?”. இந்தத் தேடல் பயணமே ‘வித் லவ்’ படத்தின் கதை!

இயக்கம் மற்றும் திரைக்கதை 

இயக்குநர் மதன், இளைஞர்களை கவர்வது மட்டுமின்றி மூத்தோர்களின்  நினைவலையை தூண்டும் விதத்திலும் படத்தில் எமோஷனல் காட்சிகளும், காமெடியும் சரிவிகிதத்தில் கலந்து வழங்கி பலே சொல்ல வைத்து விட்டார். ஒரு வாய்ப்பைத் தவறவிட்டோமே என்ற கனத்தை, நண்பர்களுடனான கலகலப்பான உரையாடல்கள் மூலம் பேலன்ஸ் செய்திருப்பது சிறப்பு. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் ஒருவரைத் தேடுவதை ‘ஸ்டாக்கிங்’ (Stalking) என்று சொல்லாமல், அதன் பின்னாலுள்ள காதலை விளக்கும் காட்சி முதிர்ச்சியான அணுகுமுறை.

நடிப்பு (Performances)

தொழில்நுட்பம் (Technical)

குறை

*   ஹீரோ  ஸ்மோக் பண்ணும் காட்சிகள் அதிகமாக இருப்பது  உறுத்தல்

*   இடைவேளைவரையிலான காட்சி அமைப்புகளை இன்னும் அக்கறைக் காட்டி                                  இருக்கலாம்

புது டைரக்டர் மதனின் இந்த ‘வித் லவ்’, இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி, தங்கள் பள்ளிப்பருவக் காதலை நினைத்துப் பார்க்கும் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு கம்ப்ளீட் என்டர்டெய்னர். தாராளமாகத் தியேட்டருக்குச் சென்று ஒருமுறை ‘ஹேப்பியா’ பார்க்கலாம்!

மார்க்: 4/5