AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மலம் சொல்லும் மருத்துவ இரகசியங்கள்!

By admin | Dec 06, 2025

உடலின் கழிவுப் பொருளான மலம் (Stool), ஒருவரின் செரிமான மண்டலம், உறுப்புகளின் ஆரோக்கியம் மற்றும் நுண்ணுயிர்களின் சமநிலை குறித்துப் பேசும் ஒரு சக்திவாய்ந்த மருத்துவக் குறிப்புப் புத்தகம் ஆகும். ஒருவரின் மலத்தின் நிறம், வடிவம், மற்றும் அதனைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் பலவிதமான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.

1. 🟤 மலத்தின் அடிப்படை ரகசியம்

நாம் உண்ணும் உணவு, செரிமான மண்டலத்தால் உடைக்கப்பட்டு, குடலில் உள்ள பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு மலமாகிறது.

2. 🧱 பிரிஸ்டோல் ஸ்டூல் சார்ட் (Bristol Stool Chart) வகைகள்

மலத்தின் வடிவம் மற்றும் தன்மையை வைத்து, ஒருவரின் செரிமான நிலையை இந்தச் சார்ட் ஏழு வகையாகப் பிரிக்கிறது:

வகை விளக்கம் சுட்டிக்காட்டும் நிலை
1 ஆட்டுப் புழுக்கை போல தனித்தனி கடினமான கட்டிகள். தீவிர மலச்சிக்கல்
2 பெரிய, கடினமான, நீர்தன்மையற்ற கட்டி. மிதமான மலச்சிக்கல்
3 & 4 இலகுவான, நீருடன் கூடிய, வெடிப்புகள் கொண்ட / பாம்பு போன்ற வடிவம். நார்மல்
5 மிருதுவான, தனித்தனி கட்டிகள். உணவில் நார்ச்சத்துப் பற்றாக்குறை
6 ஒன்றோடு ஒன்று பிணைந்து, பேஸ்ட் போன்று வெளியேறுவது. குடலில் உள்காயம் / அழற்சி / தொற்று
7 எந்த திடமும் இல்லாமல் முழுத் தண்ணீராகப் போவது. வயிற்றுப்போக்கு / குடல் அழற்சி

3. 🎨 மலத்தின் நிறம் சொல்லும் நோய்கள்

நார்மல் நிறத்தைத் தாண்டி மலம் நிறம் மாறினால், அது உள் உறுப்புகளில் உள்ள சிக்கலைக் குறிக்கிறது:

4. 🔬 மலப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுபவை

மலத்தைப் பரிசோதனைக்கு அனுப்பும் போது, பல தொற்றும் தொற்றா நோய்களைக் கண்டறிய முடியும்:

நோய் வகை உதாரணங்கள் பரிசோதனை முறை
பாக்டீரியா தொற்று டைபாய்டு (சால்மொனெல்லா), சீதபேதி (ஷிகெல்லா), காலரா. நுண்ணுயிர் வளர்ப்பு (Culture)
வைரஸ் தொற்று ரொட்டா வைரஸ் (பேதி), ஹெப்பாடைட்டிஸ் A & E (கல்லீரல் பாதிப்பு). வேதிப்பொருள் மற்றும் மரபணுக் கூறு பரிசோதனை
புழுக்கள் ஜியார்டியா, ஊசிப் புழு, கொக்கிப் புழு, நாடாப்புழு. நுண்ணோக்கி ஆய்வு (Microscopic Exam)
தொற்றா நோய்கள் குடல் அழற்சி நோய்கள் (IBD), குடல் புற்றுநோய், சீலியாக் நோய். Occult Blood Test, எதிர்ப்பு சக்தி சார்ந்த ரசாயன பரிசோதனை

5. 🧬 அதிநவீன சோதனைகளும் எதிர்கால மருத்துவமும்

6. 💬 மருத்துவர் பார்வையில் மலத்தின் விளக்கம்

மருத்துவர்களிடம் நோயாளிகள் கூறும் மலத்தின் விளக்கங்கள்:

🆘 முதல் சிகிச்சை: ORS!

மேலே கூறிய எந்த வகையான வயிற்றுப் போக்காக இருந்தாலும், முதல் மற்றும் சிறப்பான சிகிச்சை என்பது ORS (Oral Rehydration Salt Solution) அதாவது வாய்வழி நீர்ச்சத்து கூட்டும் உப்புக் கரைசல் ஆகும். உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 245 mosm/L செறிவு கொண்ட கரைசலைத் தயாரித்து, நீர்ச்சத்து குறையாமல் இருக்கப் பருகி, வயிற்றுப் போக்கு நிற்காவிடில் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

இந்த மருத்துவத் தகவல் வழங்கியவர் : Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா