AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

ஆழி – விமர்சனம்!

By admin | Feb 27, 2026

நடுக்கடலில் ஒரு மீன்பிடி படகிற்குள், அதிகாரத்திற்கும் உயிர் பிழைப்புக்குமான போராட்டத்தை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறது ‘ஆழி’. தந்தை – மகள் பாசத்திற்கும், காதலனின் போராட்டத்திற்கும் இடையிலான இந்த மோதல் திரைக்கதையில் இன்னும் வேகம் கண்டிருந்தால் ஆழமாக இருந்திருக்கும்.

கதைக்களம்:

பகுதி நேர மெக்கானிக்காக இருந்து கொண்டு கடத்தல் தொழிலில் ஈடுபடும் கொடூர வில்லன் சரத்குமார். அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், சக மாணவன் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். இதையறிந்த சரத்குமார், காதலனை நடுக்கடலுக்குக் கடத்திச் சென்று கொலை செய்யத் திட்டமிடுகிறார். அந்த மரணப் பிடியில் இருந்து காதலன் தப்பித்தாரா? காதலி என்னவானார்? என்பதே மீதிக்கதை.

நடிப்பு:

தொழில்நுட்பம்:

ஆனந்த் என்.நாயரின் ஒளிப்பதிவு குறுகிய இடங்களுக்குள் நடக்கும் காட்சிகளை நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. மினிநேச்சர் முறையிலான காட்சிகள் அதிகம் மெனக்கெடல் இல்லையென்றாலும் ஓகே ரகம். ஜாஸி கிப்ட் மற்றும் வில்லியம் பிரான்சிஸின் இசை சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ரசூல் பூங்குட்டியின் ஒலி வடிவமைப்பு கச்சிதம் என்றாலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இயக்கம்:

இயக்குநர் மாதவ் ராமதாசன் ஆழ்கடலில் இருவருக்கிடையிலான உடல் மற்றும் மன ரீதியான போராட்டத்தைச் சொல்லத் துணிந்திருக்கிறார். ஆனால், கதையில் உள்ள லாஜிக் ஓட்டைகளும், அழுத்தமில்லாத காரணங்களும் திரைக்கதையைப் பலவீனப்படுத்துகின்றன. வில்லனைக் காப்பாற்ற நாயகன் போராடும் இரண்டாம் பாதி திருப்பங்கள் சுவாரஸ்யமாக அமையவில்லை.

பிளஸ்:

மைனஸ்:

சரத்குமாரின் நடிப்புக்காகவும், இறுதிக்காட்சிக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.

மார்க்: 2.25 / 5