AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

சர்வதேச எமோஜி தினம் இன்று!

By admin | Jul 17, 2025

எமோஜிக்கள் என்பவை அடிப்படையில் உணர்வுகள் மூலம் செய்திகளை தெரிவிக்கும் ஒரு குறியீட்டு படம் தான். இவை தற்போது வாட்ஸ் அப், டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பயன்படுத்தப்படும் இன்றைய சூழலில், அனைவருக்குமான ஒரே மொழியாக எமோஜிக்கள் உள்ளன என கூறினால் அது மிகையாகாது. எதிர்காலத்தில் அனைவருக்குமான ஒரு பொதுமொழியாக மாறுமா என்ற ஆய்வுகள் கூட மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எமொஜிக்கள் தோன்றுவதற்கு முன்னோடியாக இருப்பது ஜப்பானியர்கள் தான். ஏனென்றால் அவர்களது மொழியின் எழுத்துக்கள் அனைத்தும் சித்திர எழுத்துக்கள் என்பதே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. 1998-ல் ஜப்பானை சேர்ந்த என்டிடி டொகொமோ என்ற நிறுவனமே எமோஜிக்கு செயல் வடிவம் கொடுத்தது. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஷிகேடிகா குரிடா என்பவர் தான் செய்திகளை படங்கள் மூலம் சொல்ல முடியும் என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது இருந்த தொழில்நுட்பம் பெரிய அளவிலான படங்களை அனுப்புவதற்கு ஒத்துழைக்காததால், அவர் உருவாக்கியது தான் இப்போது நாம் பயன்படுத்தும் எமோஜிக்கள். இதை எல்லாம் நினைவூட்டவே ஜூலை 17-ம் தேதி உலக எமோஜி தினமாகக் (World Emoji Day) கொண்டாடப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் எமோஜிகளின் சரியான அர்த்தங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக, இதய எமோஜிகள் பல்வேறு வண்ணங்களில் வந்து, ஒவ்வொன்றும் தனித்துவமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இந்த உலக எமோஜி தினத்தில், ஹார்ட் எமோஜிகளின் அர்த்தங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இதய எமோஜிகளின் அர்த்தங்கள்

இதய எமோஜிகள் பெரும்பாலும் அன்பு, பாசம், நட்பு, ஆதரவு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தப் பயன்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு வண்ணமும் ஒரு தனித்துவமான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. சரியான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பயன்படுத்துவது உங்கள் உரையாடலை மேலும் தெளிவாக்கும்.

இந்த இதய எமோஜிகளின் சரியான அர்த்தங்களை அறிந்துகொண்டு பயன்படுத்துவது, உங்கள் உரையாடலை மேலும் துல்லியமாகவும், உணர்வுபூர்வமாகவும் மாற்றும்.

தனுஜா