AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

வாட்ஸ் அப்- பில் இம்புட்டு அப்டேட் வரப் போகுதா?

By admin | Nov 28, 2017

பல கோடி மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களுள் வாட்ஸ் அப் செயலி முக்கியபங்கு வகிக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப் செயலியையும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் இன்றி, 256 பேர் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் மூலமும் அவர்களுக்கும் செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்வது வாடிக்கையாகி விட்டது.

இதனிடையே இன்னும்சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் யூ  டியூப் வீடியோ பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இதேபோல் குரூப்வீடியோ கால் என்ற அப்டேட்டும் இதில் வரவுள்ளது. அதிலும் யூடியூப் பார்க்கும் அப்டேட்டில் நிறைய வித்தியாசமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது வாட்ஸ்ஆப் பயன்பாட்டை இன்னும் அதிகமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் யூடியூப் நிறுவனத்துடன் கஷ்டப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி இருக்கிறதாம்.

 வாட்ஸ்ஆப் அப்டேட்

பேஸ்புக்கின் கைக்கு சென்ற பின் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன் அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் வசதியும் கொண்டு வரப்பட்டது.

வாட்சப் குரூப் வீடியோ

மேலும்  வாட்ஸ் ஆப்பில் குரூப் வீடியோ கால் பேசும் வசதி வந்துள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த அப்டேட் வர இரண்டு வாரம் ஆகும். முன்பு ஒரு சமயத்தில் ஒரு நபரிடம் மட்டுமே வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேச முடியும். ஆனால் இந்த அப்டேட்டில் நாம் இருக்கும் குரூப்பில் உள்ள அனைவரிடமும் ஒரே நேரத்தில் வீடியோ கால் பேச முடியும். வீடியோ கான்பிரண்ஸ் கால் வசதி என்று இது அழைக்கப்படுகிறது.

வாய்ஸ்நோட்

இதுவரை இருந்த வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட் அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது. நாம் பேசும் வரை அதில் இருக்கும் மைக் சிம்பலை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் புதிய அப்டேட்டில் மைக்கை ஒருமுறை அழுத்தி மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியும்.

 
இனி யூடியூப் பார்க்கலாம்

அதேபோல் புதிய அப்டேட்டில் இனி யூ டியூப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த அப்டேட் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்ல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதன்படி நமக்கு யாராவது வாட்ஸ் ஆப்பில் யூ டியூப் லிங்க் அனுப்பினால் நாம் யூ டியூப் பக்கத்தை திறக்காமலே வாட்ஸ் ஆப்பிலேயே அதை பார்க்க முடியும். மேலும் அதே சமயத்தில் நண்பர்களுடன் சாட்டும் செய்ய முடியும். அதேபோல் வீடியோ பார்த்துக் கொண்டே ஸ்டேடஸ் கூட மாற்ற முடியும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது .