AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

21 ஆம் நூற்றாண்டில் குடி தண்ணீருக்காக யுத்தம் என்ற மறக்க முடியாத உண்மை.!.

By admin | May 01, 2016

தண்ணீர் என்ற இயற்கை அதிசயத்தை இன்று வரை நாம் சட்டை பண்ணியதே இல்லை என்பதை அடுத்த பத்து ஆண்டுகளில் உணரப் போவது நிதர்சனம். இரண்டு மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தேன் தற்போதய நிலை என்னவென்றால் பெட்ரோலை விட குடி தண்ணீரின் விலை அதிகம் என்று (இந்தியாவுல 61 ரூவா சார் ஒரு லிட்டர் பெட்ரோல்னு சொல்றவங்க பழைய போஸ்டை படியுங்க)…………..சீனா திபெத்தை நோக்கி யுத்தம் தொடுத்த முக்கிய காரணமே தண்ணீர் என்பது சிலருக்கு மட்டுமே உண்மை…….சார் நான் பாஸ்போர்ட் வைத்திருக்க வில்லை என்று கூறும் ஆட்களுக்காக இந்தியாவை நோக்கி நம் பார்வை திருப்பினால் பத்து வருஷம் எல்லாம் இல்லை இன்னும் 5 வருடங்களிலே நாம் தண்ணீருக்காக பல நூறு மைல்கல் களுக்கு அப்பால் இருந்து வரனும்ங்கிற நிலைமை இருக்க போவது தெள்ள தெளிவாக தெரிகிறது.

நதி இனைப்புனு லோக்கல் லெட்டர்பேட் கட்ச்யில் இருந்து நேஷனல் மோனோபோலி கட்சிகள் கூறுவது தான் ஆகப்பெரிய காமெடி ஏன் என்றால் 29 மானிலங்கள் மற்றும் 7 யூனியன் டெரிட்டரி களை கொண்ட இந்தியாவில் 29 மானிலங்களின் வழியாய் பாயும் நதிகளை மையப்படுத்து அனைத்து மானிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் நிரந்திர வாய்க்கா தகராற்றை வழக்கமாக கொண்டிருக் கிறது. நதிகளை தேசிய உடமை ஆக்கும் சிறு விஷயத்தை விட்டு நதி நீர் இனைப்பு என்ற பூச்சான்டி கதை தான் 60 ஆண்டுகளாய்.

சரி நாம் தான் இதற்க்கு எதாவது தீர்வு வைத்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. மழை நீர் சேகரிப்பு வெறும் வார்த்தைகளாய் போனது தான் மிச்சம் எத்தனை பேர் அதை செய்கிறோம். எத்தனை கிணற்றை மூடி ஸ்டோர் ரூமாகவும் கார் நிறுத்தும் இடமாகவும் ஆக்கிவிட்டு 20 லிட்டர் கேன்களில் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கிறோம். இயற்க்கை எவ்வளவு அழகாய் மழை பொழிந்து நீரை தருகின்றது அதை எல்லாம் நாம் கடலுக்கு தாரை வார்த்து விட்டு பின்பு 6000 கோடிகளுக்கு மேல் செலவழித்து அமெரிக்கா நாட்டு ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் பேட்டன்ன்டுக்கு பணம் செலவழித்து கடல் நீரை சுத்த நீராக மாற்றும் இந்த காலக்கொடுமை எந்த உலகத்திலாவது உண்டா.

6000 கோடிகளை தமிழகத்தில் உள்ள தொகுதிகளுக்கு பிரித்து கொடுத்தால் இயற்க்கை கொடுக்கும் நீரை எப்படியெல்லாம் நீர் நிலைகளை உயர்த்தி, ஏரி கன்மாய்களை தூர் வாரி பாத்காக்க முடியும் என்பது ஏன் யாருக்கும் தெரியாமல் போனது. நீர் நிலைகளை அழித்தோம் அதில் இப்போது கான்கிரீட் கொட்டி ஆக்கிரமிப்பு செய்தோம் – இயற்கை கடந்த மழையில் பாடம் புகட்டியது, நாம் அதை கண்டு பொங்கி எழுந்தோம், பொது துறையை திட்டினோம், பொறம்போக்கு அரசியல்வாதிகளை வைய்தோம் பின்பு நாங்கைந்து பொறைகளை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கிவிட்டு பின்பு அதே ரியல் எஸ்டேட் தொழிகளின் விளம்பரத்தில் மயங்கினோம்.

இது தான் இந்தியா – தண்ணீருக்காக உள் நாட்டு கலவரம் – உள் நாட்டு போர் எல்லாம் நடக்கும் என்பதில் துளி அளவும் மாற்றமில்லை.நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும் – இன்னொருவரின் இன்றைய அல்லது நாளைய தாகத்துக்கான வாழ்வாதாரமாகும் என்பதில் ஐயமே இல்லை…..