AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருது ! -லண்டன் ஆசிரியை வென்றார்

By admin | Mar 19, 2018

உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருது மற்றும் அதற்கான பரிசுத் தொகையை லண்டனை சேர்ந்த ஆசிரியை வென்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஆல்பெர்ட்டன் பள்ளியில் கலை, ஜவுளிப் பாடப் பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருபவர்ஆண்ட்ரியா ஸாஃபிர்காவ். இவர், 2018-ஆம் ஆண்டுக்கான உலகின் தலை சிறந்த ஆசிரியர் விருதை வென்றுள்ளார். துபாயில் நடைபெற்ற விழாவில் உலகின் தலை சிறந்த ஆசிரியர் விருது மற்றும் அதற்கான பரிசுத் தொகை ரூ.64 கோடி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது ஆசிரியர் பணி 5 ஆண்டுகள் தொடரும் பட்சத்தில் பரிசுத் தொகையான ரூ.64 கோடி தவணை முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்பறிவு மிகவும் குன்றிய, தீவிரவாதம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றி, பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதை இவர் ஊக்குவித்து வருகிறார். மேலும், அந்தந்தப் பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அடிப்படை கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் பேசுவதற்காக 35 மொழிகளையும் கற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.