AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

அமேசான் ஷேர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய அமெரிக்க அதிபர்!

By admin | Mar 31, 2018

சர்வதே சளவில் மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகி விட்ட அமேசான் நிறுவனம் சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மிக சாதாரணமாக தொடங்கிய இந்நிறுவனம் இன்று உலகலாவி உயர்ந்து மிக பிரபலமாக, உலகின் அதிக வர்த்தக பங்குகளை வைத்திருக்கும் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. இந்த அமேசான் நிறுவனர்தான் உலகின் டாப் பணக்கார என்று போர்ப்ஸ் குறிப்பிட்டிருந்த நிலை யில்அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமேசான் மீது தெரிவித்த காட்டமான சில கமெண்ட்ஸ்களால் பங்குச் சந்தையில் அமேசான் பங்குகளின் விலை 9% சரிவு கண்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அமெரிக்க அதிபர் திடீரென ,’மாகாணமாக இருந்தாலும் உள்ளூர் அரசாக இருந்தாலும் எதற்கும் வரி என்று எதையும் அமேசான் நிறுவனம் கட்டியதில்லை’ என்று சாடி இருந்தார். இது குறித்து “அமேசான் பற்றி எனது கவலைகளை நான் தேர்தலுக்கு நீண்ட நாட்கள் முன்பாகவே தெரிவித்துள்ளேன், இந்த நிறுவனம் வரிகளே செலுத்துவதில்லை. நம் நாட்டு தபால் ஊழியர்களை தங்கள் நிறுவன டெலிவரி பையன்களைப் போல் பயன்படுத்திக் கொள்கிறது அமேசான், இதனால் அமெரிக்காவுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது, இவர்களினால் பல சில்லரை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து வர்த்தகத்தை விட்டே சென்றுவிட்டனர்” என்று ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெள்ளை மாளிகை அமேசான் மீது நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது.

அதே சமயம் “அமேசான் நடத்தை குறித்து அதிபர் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார், இப்போதைக்கு நடவடிக்கை எதுவும் இல்லை, ஆனால் நடவடிக்கைத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும். அதிபர் தனது கவலைகளைத் தெளிவாகவே வெளிப்படுத்தி விட்டார். இந்த அமேசான் பயனாளர்கள் விற்பனை வரி செலுத்துவதில்லை. மேலும் அந்த நிறுவனத்தின் வர்த்தக முறைகளினால் நாட்டின் பல சில்லரை விற்பனையாளர்கள் வர்த்தகத்தை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் அமேசான் மீது இத்தகைய அதிருப்தியை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்பு செய்தி இணையதளம் ஆக்‌ஷியோஸ் தனது செய்தியில் அமேசான்களின் வரி கையாளுதலை மாற்ற வேண்டும் என்றும் இதனால் பல சில்லரை விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் வர்த்தகத்தைத் துறந்துள்ளனர், எனவே அமேசான் மீது நம்பிக்கை உடைப்பு அல்லது வர்த்தகப் போட்டி சட்டம் என்று எதையாவது எழுப்ப வேண்டும் என்று சாடியிருந்தது. மேலும், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஸாசின் இறகுகளை ட்ரம்ப் முறிக்க வேண்டும் என்றும் ஆக்‌ஷியோஸ் காட்டமாகத் தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த அதிருப்தியின் பின்னணியில் வேறு ஒரு கதை இருப்பதாகவும் கூறப்படுகிறது, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அமேசானின் ஜெஃப் பெஸாசுடையதுதான், தேர்தல் சமயத்தில் சுமார் 20 நிருபர்கள் ட்ரம்புக்கு எதிரான விஷயங்களைத் திரட்டி எழுத உத்தரவிட்டிருந்ததா. அதன் வெளிப்பாடுதான் இது என்று சிலர் சொன்னாலும் பங்குச் சந்தையில் அமேஸான் பங்குகளின் விலை 9% சரிவு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.