AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக பிரமாண்ட பேரணி!

By admin | Mar 25, 2018

நடப்பாண்டான 2018 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 23 பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மாணவர்கள், பெற்றோர்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளன. அத்துடன் அமெரிக்காவில் பாதுகாப்பு கருதி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனாலேயே அங்கு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1300 மாணவர்கள் உயி ரிழக்கின்றனர். இனியும் பொறுக்க முடியாது என மாண வர்கள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பியதன் எதிரொலியாக தானியங்கி துப்பாக்கிகள் வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் விதித்தார். மேலும், ஆசிரியர்கள் துப் பாக்கி வைத்திருக்க அனுமதி யும் அளிக்கப்பட்டது. ஆனால், இதில் திருப்தி அடையாத மாணவர்கள் கடந்த வாரம் காலை பள்ளி வகுப்புகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஒன்று அல்லது இரண்டு பள்ளிகளில் அல்ல அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவு கட்ட ஒன்று திரண்டு வெளிநடப்பு செய்துள்ளனர். அத்துடன் துப்பாக்கி தாக்குதலுக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு ஊர்வலமான சென்ற அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் மாணவர்களுக்கு ஆதரவாக திரண்டனர்.

அதையடுத்து தொடர்ந்து துப்பாக்கி வைத்திருப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே சமயம் மற்றொரு தரப்பு, துப்பாக்கி வைத்திருப்பது தங்களது அரசியல் சாசன உரிமை என கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், , இன்று ‘மார்ச் ஆப் அவர் லைவ்ஸ்’ என்ற பெயரில் மாபெரும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் இளைஞர்கள் போராட்டங்களில் குதித்தனர். முக்கியமாக தலைநகர் வாஷிங்டனில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் சுமார் 800 போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த போராட்டங்கள் அரங்கேறின. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பென்சிவேனியா அவென்யுவில் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் துப்பாக்கி வன்முறை கலாசாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணியாக சென்று கோஷங்கள் எழுப்பினர்