AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

45 ஆண்டு காலப் போராட்டம்: டெல்லி யு.என்.ஐ அலுவலகம் சீல் வைப்பு!

By admin | Mar 22, 2026

ந்தியாவின் ஊடக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அத்தியாயம் அதிர்ச்சிகரமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. புதுடெல்லியின் ரஃபி மார்க் (Rafi Marg) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா (UNI) செய்தி முகமையின் தலைமை அலுவலகத்தை டெல்லி போலீஸார் அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர்.

யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா (UNI): ஒரு வரலாற்றுப் பின்னணி

யு.என்.ஐ வெறும் செய்தி நிறுவனம் மட்டுமல்ல; சுதந்திர இந்தியாவின் இதழியல் வளர்ச்சியில் ஒரு தூண்.

என்ன நடந்தது ரஃபி மார்க்கில்?

டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) யு.என்.ஐ-க்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துக்கள்:

  1. ஒதுக்கீடு மீறல்: 1979-ஆம் ஆண்டே இந்த நிலம் வழங்கப்பட்டாலும், அங்கு செய்தி நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடத்தைக் கட்ட யு.என்.ஐ தவறிவிட்டது.

  2. அரசு நிலம் ‘கைது’: “மதிப்புமிக்க பொது நிலத்தை பல தசாப்தங்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று நீதிபதி சச்சின் தத்தா தனது 98 பக்கத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

  3. நிதி நெருக்கடி: ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருந்த இந்நிறுவனம், பிப்ரவரி 2025-ல் ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ (The Statesman Ltd) நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிரடி வெளியேற்றம்: ஊழியர்கள் குமுறல்

நீதிமன்ற உத்தரவு வந்த சில மணி நேரங்களிலேயே, நூற்றுக்கணக்கான போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், தற்போது மத்திய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (L&DO) வசமானது. இந்தியாவின் மூத்த செய்தி நிறுவனத்தின் அலுவலகம் இப்படிச் சீல் வைக்கப்பட்டது ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று ஒரு தரப்பும், சட்டப்பூர்வமான நடவடிக்கை என்று மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றன.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்