AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

சவுதி பெண்கள் ஃபாரின் விசிட் அடிக்க ஆண்கள் பர்மிஷன் வாங்கோணும் என்ற ஷரத்து கேன்சல்!

By admin | Aug 02, 2019

21 வயது நிரம்பிய பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது தந்தை , கணவர் அல்லது குடும்பத்தினரின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்ற விதியை சவுதி அரசு அதிரடியாக இன்று நீக்கியுள்ளது.

ஏகப்பட்ட கெடுபிடிகள் கொண்ட இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.

சல்மான் பொறுபேற்ற பிறகு சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு உள்ளன.விளையாட்டு மைதானங்களுக்கு பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சூழலில் சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தங்கள் கணவர் தந்தை அல்லது வேறு ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது.சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அந்த விதியை சவூதி அரேபிய அரசாங்கம் நீக்கியுள்ளது.

21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் ஆண்களின் அனுமதி இல்லாமலேயே விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தங்கள் குடும்பத்து ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம்செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.