AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

பெஹல்காம் தாக்குதலின் பின்னணியில் கசூரி – பகீர் தகவல்கள்!

By admin | Apr 23, 2025

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பெஹல்காமில் 28 பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கசூரி என்றும் அழைக்கப்படும் சைஃபுல்லா காலித் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெஹல்காம் படுகொலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தொடர்பை இந்திய அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா துணைத் தளபதி சைஃபுல்லா கசூரி மூளையாக செயல்பட்டான் என்பதை புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.அவன் லஷ்கர் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளன். இந்தத் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டது. அந்த பயங்கரவாதக் குழு பாகிஸ்தானில் இருந்து பயிற்சி பெற்றது. நான்கு பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் பாகிஸ்தானியர்கள். பயங்கரவாதிகள் காட்சியைப் பதிவு செய்வதற்காக தங்கள் தலைக்கவசங்களில் ஒரு கேமராவை பொருத்தி இருப்பது உண்டாம் .

‘எதிர்ப்பு முன்னணி’ என்ற போர்வையில் லஷ்கர் மற்றும் ஐ.எஸ்.ஐ.யால் தான் இந்தப் படுகொலை திட்டமிடப்பட்டது என்பதை இந்தியா உறுதிப்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில், இந்த தாக்குதலை ஆறு பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.பயங்கரவாதிகள் பல பைக்குகளைப் பயன்படுத்தினர். அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து AK 47 களைப் பயன்படுத்திச் சுட்டனர். அவர்களில் இருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். காஷ்மீரை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. டி.ஆர்.எஃப் என்பது பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஷ்கர்-இ-கொய்பாவின் கிளை அமைப்பாகும்.

கசூரி லஷ்கர்-இ-தொய்பாவின் துணைத் தலைவராக உள்ளான். பாகிஸ்தான் பயங்கரவாதியும் லஷ்கர்-இ-தொய்பாவின் இணை நிறுவனருமான ஹபீஸ் சயீத்துடன் கசூரி நெருக்கமாக இருப்பவன். பாகிஸ்தான் ராணுவத்தின் ‘அன்பான சொத்து’ என்றும் அழைக்கப்படும் கசூரி,. ஜம்மு காஷ்மீரில் இதற்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவந என்கிறார்கள்

கசூரி, இளைஞர்களை பயங்கரவாதத்தின் பக்கம் ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறான். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கைபர் பக்துன்க்வாவில் ஆற்றிய உரையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் கசூரி அழைப்பு விடுத்திருந்தான்.

2026 பிப்ரவரிக்கு முன்பு காஷ்மீரைக் கைப்பற்ற முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும், வரும் நாட்களில் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்றும் கசூரியின் அறிக்கை இருந்தது.

* தென்காசி தேவா