உத்தர பிரதேசம் கான்பூர் தேஹத் மாவட்டம், தேராபூர் வட்டம், பராவுன்க் கிராமத்தில் 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ஏழை விவசாய குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த அவர், கான்பூரில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். அதேநகரில் உள்ள டிஏவி கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் கான்பூர் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார். இளம் வயதில் ஐஏஎஸ் அதிகாரி யாக விரும்பிய அவர், அதற்கான குடிமைப் பணித் தேர்வினை எழுதி னார். மூன்றாவது முயற்சியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றார். ஆனால் ரேங்க் பட்டியலில் பின்தங்கியதால் அந்தப் பணியை ஏற்காமல் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
தர்போது நாட்டின் புதிய ஜனாதிபதியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்தின் ஒரே மகள் சுவாதி. அவர், ஏர் இந்தியா நிறுவனத்தில் கேபின் மேற்பார்வையாளராக (விமான பணிப்பெண்) பணியாற்றி வருகிறார். சுவாதி டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பள்ளி படிப்பையும், பின்னர் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் உளவியல் படித்து பட்டமும் பெற்றவர். தந்தை ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு தன்னை சந்தித்த நிருபர்களிடம் அவர், ” நான் தொடர்ந்து விமான பணிப்பெண்ணாக பணிபுரியவே விரும்புகிறேன். எனது தந்தை நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வந்து இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய கடினமான உழைப்பே காரணம்.
எனது தந்தை எப்போதும் குடும்பத்தினரிடம், அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும் என்று வலியுறுத்துவார். அதனால்தான் எங்களது குடும்பத்தினர் அனைவருமே இன்று சொந்தக் காலில் நிற்கிறோம். எங்களுக்கென்று தனி அடையாளத்தை கொண்டு இருக்கிறோம். aஎங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அனைவரிடம் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்துவார். அதன் காரணமாகத்தான் எங்களது குடும்பம் இப்போது சொந்தக் காலில் நிற்கிறோம். அவர் உயர்ந்த பதவிக்கு வந்ததால் எனது வேலையை விடமாட்டேன். நான் தொடர்ந்து விமானப் பணிப்பெண்ணாகவே பணிபுரிய விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.