AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

ஜனாதிபதியிடமிருந்து பத்ம விபூஷண் பெற்றார் இளையராஜா!

By admin | Mar 20, 2018

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 84 பேருக்கு வழங்கபப்டும் என அண்மையில் அறிவிக்கப்பட்டன.

அதில், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட மூவருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் டோனி உள்பட 9 பேருக்கு பத்ம பூஷண்,தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.இந்நிலையில், பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். முதற்கட்டமாக 43 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.இந்நிலையில், பத்ம விபூஷண் விருது பெற்ற இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.