ஒரு படத்தைப் பார்த்ததும் நம் குழந்தை பருவத்தை நினைவூட்டும் சில வினாக்களில் மிகச் சில இவை .. இவற்றில் எதையேனும் நீங்கள் செய்ததுண்டா ?
வீட்டில் கிடைக்கும் உடைந்த பொருட்களை எல்லாம் தேடி சொப்பு சாமான் சேர்த்ததுண்டா??
குழம்பு வைக்க மிளகாய்த்தூள் வேண்டுமென செங்கல்லை விரல் தேயத் தேய்த்து செங்காமட்டை அரைத்ததுண்டா??
மண்ணில் கேக் செய்து தோழி பிறந்தநாளை கொண்டடியதுண்டா??
திருவிழாக் கடையில் பலூனுக்காகவும் பஞ்சுமிட்டாய்க்காகவும் அடம் பிடித்ததுண்டா??
நிலவு வந்த நேரத்தில் அப்பாவின் வரவிற்காக காத்திருந்த அம்மாவின் சேலையில் ஒளிந்து கொண்டு அப்பாவின் கைகளையே பார்த்ததுண்டா ??
மழைக் காலத்தில் சிவனேன்னு செடியில் அமர்ந்திருந்த தட்டான (தும்பி) புடிச்சி ஏதோ ஓடி ஓடி பாட்டாம் பூச்சிய புடிச்ச மாறி “ஏய் புடிச்சுடண்டி புடிச்சுடண்டி னு ” கத்தியதுண்டா ??
பள்ளி முடிந்ததும் விளையாடிவிட்டு கால தாமதமாய் வீடு செல்ல , உங்க அம்மா உங்களை வெளுத்து வாங்கியதுண்டா??
டிக் டிக் யாரது ? தேவதை?என்ன வேண்டும்? கலர் வேண்டும் என்ன கலர் ??
பூ பறிக்க வருகிறோம்..பூ பறிக்க வருகிறோம் எந்த பூவை பறிக்கனும் எந்த பூவை பறிக்கனும்?
ஒரு குடம் தண்ணி ஊத்த ஒரு பூ பூத்துச்சாம்.இரண்டு குடம் தண்ணி ஊத்த இரண்டு பூ பூத்துச்சாம்..
இதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்பவர் என்றால் தற்போது திரைக்கு வந்துள்ள ‘பள்ளிப் பருவத்திலே’ படம் கண்டிப்பாக்ப் பிடிக்கும்.
படத்தின் கதை என்னவென்று கேட்டால் தஞ்சாவூர் ஏரியாவில் உள்ள அழகான கிராமத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் கே.எஸ்.ரவிக்குமார். தன் வேலையில் முழு அர்ப்பணிப்பு, ஒவ்வொரு மாண்வர்கள் மீது தனி அக்கறையும் கொண்டதால் ஊரே கை தொழுது வணக்கம் செலுத்தும் அளவிலான நல்ல மனிதர் . இதே ஸ்கூலில் இறுதிஆண்டில் படிக்கிறார்கள் நந்தன்ராமும் வெண்பாவும். இந்த நந்தன்ராம் கே. எஸ் ரவிகுமார் மகன். அந்த படிப்பாளி ஊரில் பெரிய மனிதராக இருக்கும் பொன்வண்ணனின் மகளும் சக கிளாஸ் மேட்டுமான வெண்பாவைக் காதலிக்கிறார்.
இந்த விஷயம் கேள்விப்பட்டு கோபமாகிறார்கள் வெண்பாவின் அப்பா பொன்வண்ணனும் சித்தப்பாவான ஆர்.கே.சுரேஷும். விஷயம் தெரிந்து கே. எஸ் . ரவிகுமாரின் மீது வைத்திருக்கும் மரியாதைக்காக நந்தன் ராமை அழைத்து அட்வைஸ் செய்த நிலையிலும் அந்த மாணவன் தன் காதலில் தீவிரம் காட்ட… விவகாரம் ஊர்ப் பஞ்சாயத்து வரைக்கும் வந்துவிடுகிறது. பஞ்சாயத்தில் தான் காதலிக்கவில்லை என வெண்பா சொன்னதும் கடுப்பான வெண்பா உறவினர்கள் நந்தன் ராமை தாக்குகிறாகள்.
ஆனாலும் காதலி, தன் காதலை எப்படியும் சொல்லி விடுவாள் என்று நம்பும் நந்தன் ராம், அதே சமயம் தன்னால் தன் சொந்த மகனை கண்டிப்புடன் வளர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் நொந்து பிரேமாகி விடும் அப்பா கே.எஸ்.ரவிக்குமார், கூடவே தன் குடும்ப கௌரவத்துக்கு வேட்டு வைத்த நந்தன் ராமை கொல்ல திட்டம் போடும் ஆர்.கே.சுரேஷ் என ட்விட்ஸ் (?) டுடன் தொடரும் இந்தப் பள்ளிப் பருவத்து காதலின் முடிவு என்ன என்று சொல்வதுதான் பள்ளிப் பருவத்திலே.
நாயகன் – நந்தன் ராம் – “உள்ளத்தை அள்ளித்தா” போன்ற படங்கள் மூலம் முன்னொரு காலத்தில் ஹிட் அடித்த இசையமைப்பாளர் சிற்பியின் வாரிசு, இயக்குநர் சொன்னதை செய்திருகிறார். பல நேரங்களில் ஒன்றுமே செய்யாமல் இருப்பதும் இயக்குநர் சொல்லிதான் நடந்திருக்கக்கூடும். நாயகி வெண்பாவுக்கு கொஞ்சம் அழுத்தமான கேரக்டர். குடும்ப பாங்கில் அதனை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.பொங்கி வரும் காதலையும் அடக்கிக்கொண்டு, அப்பாவிற்கு காதல், குடும்பம், அன்பு, ரொமான்ஸ், கோபம் என்று தன்னால் முடிந்த பல பரிமாணங்களை வெளிப்படுத்தி தனி கவனம் பெறுகிறார். அப்பா + ஹெட் மாஸ்டர் ரவிகுமார் ஓ கே.
ஆனாலும் பள்ளிப் பருவத்திலே என்ற டைட்டில் வைத்துக் கொண்டு அந்த ஸ்டுண்ட் வாழ்க்கையில் நிகழும் பருவ காதலை மட்டுமே பிரதானப்படுத்த நினைத்து ஒட்டு மொத்த படத்தை கொடுத்திருக்கிறார். அது கொஞ்சம் சலிப்பைக் கொடுத்தாலும் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தன் பள்ளிக் காதல் மற்றும் காதலியை நினைவுக்குக் கொண்டு வருவதில் இயக்குநர் வாசு பாஸ்கர் ஜெயித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.!
மார்க் 5 / 2. 2.5
செல்லப்பா