AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

அகவெளி வழங்கும் ஒரு வருட அக்குபங்சர் பட்டய (டிப்ளோமா) வகுப்பு:

By admin | Jun 19, 2023

மரபு மருத்துவங்கள், இயற்கைவழி வேளாண்மை உள்ளிட்டவற்றை நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் அமைப்பு ‘அகவெளி வாழ்வியல் நடுவம்’. இது இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அகவெளி வாழ்வியல் நடுவத்தின் அங்கங்களாக இருக்கும் அக்கு சிகிச்சையாளர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு அக்குபங்சர் மூலமாக ஆரோக்கிய வாழ்வு, உடலை அறிவோம், நமக்குள் ஒரு மருத்துவர் என்கிற பெயரில் மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அளித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்துடன் இணைந்து அகவெளி வாழ்வியல் நடுவம் ஒரு வருட அக்குபங்சர் டிப்ளோமா வகுப்பும் வழங்கி வருகிறது.

பயிற்சி மையங்கள்:

1.தஞ்சாவூர்
(முதலாவது சனி, ஞாயிறு )

2.விழுப்புரம் (முதலாவது சனி, ஞாயிறு )

3.கரூர்
(இரண்டாவது சனி, ஞாயிறு)

4.மதுரை
(இரண்டாவது சனி, ஞாயிறு)

5.சென்னை
(நான்காவது சனி, ஞாயிறு)

மாதம் இரண்டு நாட்கள் வகுப்பு நடைபெறும்.

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி

வகுப்பு ஆரம்பம்: ஆகஸ்ட் 2023

தேவையான ஆவணங்கள்:

1.பத்தாம் வகுப்பு சான்றிதழ்
2.பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்
3.மாற்றுச் சான்றிதழ் (TC)
3.ஆதார் அடையாள அட்டை
4.கடவுச்சீட்டு அளவு புகைப்படம் (Passport size photo) 4

சேர்க்கைக்கான கடைசி தேதி: 05.07.2023.

தொடர்பு எண்கள்:
+91 91592 21618,
+91 94892 16282