AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

NEFT மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

By admin | Aug 07, 2019

நெஃப்ட் என்றும் என்ஜிஎப்டி எனவும் குறிப்பிடப்படும் ஆன்லைன் பணம் செலுத்தும் வசதி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய நிதிக் கொள்கை இன்று அறிவிக்கப் பட்டது. இதில் ரெப்போ ரேட்டை 35 சதவீதம் குறைப்பதான அறிவிப்பு முக்கியமான தாகும். ஆசிய நாடுகளிலேயே, வேறு எந்த மத்திய வங்கியையும்விட குறைவான வட்டி விகிதத்தை அறிவித்து உள்ளது ரிசர்வ் வங்கி. மந்தமான பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே, ரிசர்வ் வங்கி இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க துவங்கியுள்ளது.

அதில் மற்றொரு அறிவிப்பு என்பது, நெஃப்ட் சார்ந்தது ஆகும். நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வரும் டிசம்பர் முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.

இந்த முடிவு, சில்லறை பணம் செலுத்துதல் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சில்லறை செலுத்துதல் சிஸ்டம் மூலமாக தற்போது, பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். நெஃப்ட் சிஸ்டம் மூலமாக ரூ.2 லட்சம் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

மேலும், ரிசர்வ் வங்கி 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7% என்ற இலக்கிலிருந்து 6.9% என்ற இலக்கிற்கு குறைத்துள்ளது.முன்னதாக கடந்த ஜூன் மாதம் முதல், ஆர்.டி.ஜி.எஸ். எனப்படும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) மற்றும் நெஃப்ட் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய சேவை கட்டணம் கிடையாது என்று அறிவித்தது.