AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மோடி அரசின் மீதான நம்பிக்கை : முதலிடத்திலிருந்து மூன்றாமிடம் சரிவு!

By admin | Jan 29, 2018

இந்திய பிரதமர் மோடியையும், பாஜகவையும் நாட்டிலுள்ள பலரும் தொடர்ந்து பல விதங்களில் விமர்சனம் செய்தாலும் மக்களிடத்தில் அவரது செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்ற ரீதியிலான சர்வே ரிசல்ட் தொடர்ந்து வெளியாவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் தற்போது அரசு மீது அதிகம் நம்பிக்கை உடைய மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாக உலக நம்பிக்கைக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. முதலிடத்திலிருந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நம்பிக்கைக் கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 74 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 67 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருந்த சீனா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தோனேசியா 71 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 68 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.,

இந்தியாவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 66 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் , சிங்கப்பூர் 58 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன ஆனாலும். பணமதிப்பழிப்பு, மானியம் ரத்து, ஆதார் கட்டாயம், ஜிஎஸ்டி என போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் அரசு மீது அதிகம் நம்பிக்கையுடைய மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது பெருமையாக பேசப்படுகிறது.