AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மோடியின் உளறல் – டெலிகிராப் நெத்தியடி!

By Editor | Aug 14, 2023

மணிப்பூர் குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தில் எட்டுநாள்கள் போராடி மூன்று நாள்கள் அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்விக்கனைகள் தொடுத்து, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் உணர்ச்சிப் பிழம்பாக கொந்தளித்து அதன்பிறகாவது இவர் உருப்படியாக பதில் சொல்வார், விளக்கமளிப்பார், மணிப்பூரில் அமைதிதிரும்ப எதிர்காலத் திட்டம் அறிவிப்பார் என்று பார்த்தால் அவர் பேசிய 2மணி நேரம் 16 நிமிடங்கள் வெறும் ஊத்தல், உளறல், பேத்தல் !

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாட்டில் உள்ள அனைவருக்கும் இது நன்றாகத் தெரியும். இந்த உண்மையை உலகுக்கு தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள் குறிப்பாக வடக்கு ஊடகங்கள் விலைபோகி இந்த உளறலையே கின்னஸ் சாதனை என உருட்டிக்கொண்டிருக்க டெலிகிராப் நாளிதழ் நெத்தியடியாக உளறல் உளறல் உளறல் …………… Blah blah blah ……….)என்று முதல் பக்கம் முழுவதும் எழுதி செய்தி வெளியிட்டிருக்கிறது…!

உண்மையிலேயே இதற்குத் துணிச்சல் வேண்டும்.

எனக்குத் தெரிந்து இந்திய ஊடக வரலாற்றில் இவ்வளவு துணிச்சலாக செய்தி வெளியிட்டதில்லை.

ஒரு ஊடகனாகப் பெருமிதம் கொள்கிறேன்

வாழ்த்துகள் டெலிகிராப்

#The_Telegraph

அப்பணசாமி